குல்காம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குல்காம் மாவட்டம்
மாவட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்ட அமைவிடம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்ட அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
தலைமையிடம்குல்காம்
மொழிகள்
 • அலுவல் மொழிஉருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்http://kulgam.gov.in

குல்காம் மாவட்டம் (Kulgam District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமைந்த இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். 410 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம், இமயமலையின் பீர்பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

குல்காம் மாவட்டம் வடக்கில் சோபியான் மாவட்டம், வடகிழக்கில் புல்வாமா மாவட்டம், கிழக்கில் அனந்தநாக் மாவட்டம், தென்கிழக்கில் இராம்பன் மாவட்டம், தெற்கில் ரியாசி மாவட்டம், மேற்கில் பூஞ்ச் மாவட்டம், வடமேற்கில் பட்காம் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

நிர்வாகம்[தொகு]

குல்காம் மாவட்டம் குல்காம், டி எச் போரா, தேவ்சர், ஃப்ரிசல், பாஹ்லூ, யாரிபோரா மற்றும் க்வாய்மோ என எழு வருவாய் வட்டங்களையும், குய்மொ, பாஹ்லூ, டி எச் போரா, தேவ்சார், குல்காம், ஃப்ரிசல் மற்றும் பெஹிபாக் என 7 ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது. [1]

அரசியல்[தொகு]

குல்காம் மாவட்டம் நூரபாத், குல்காம், ஹோம்ஷாயில்பக் மற்றும் தேவ்சர் என நான்கு சட்ட மன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குல்காம் மாவட்ட மொத்த மக்கள் தொகை 424,483 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 217,620, பெண்கள் 206,863 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 951 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1,035 பேர் வீதம் உள்ளது. சராசரி படிப்பறிவு 59.23% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 69.59% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.49% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 71,501 ஆக உள்ளது.[3].

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் 98.49 %, இந்துக்கள் 1.01 %, சீக்கியர்கள் 0.24 % உள்ளனர்.

தொழில்[தொகு]

நெற் பயிர், ஆப்பிள் தோட்டம் மற்றும் ஆடு மேய்த்தலுமே இம்மாவட்டத்தின் முக்கியத் தொழிலாக உள்ளது. நெற்பயிர் மற்றும் ஆப்பிள் அதிகமாக பயிரிடப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்காம்_மாவட்டம்&oldid=2973599" இருந்து மீள்விக்கப்பட்டது