கீர் பவானி கோவில்
Jump to navigation
Jump to search
கீர் பவானி (Kheer Bhawani) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்து கோவில் ஆகும். இக்கோவில் கீர் பவானி எனும் இந்துக் கடவுளுக்கான கோவிலாகும். இது சிறிநகர் நகருக்கு கிழக்கே 14 மைல்கள் தொலைவில் குல் முல் கிராமத்தில் அமைந்துள்ளது. காசுமீர் இந்துகளின் வழிபாட்டிடம் ஆகும். கீர் எனும் சொல்லுக்கு கூழ் என்று பொருள். இக்கோவிலில் கடவுளுக்கு அரிசிக் கூழ் படைக்கப்படுவதால் கீர் எனும் சொல் கோவிலின் பெயருடன் இணைந்துகொண்டது. இந்துக்களின் நம்பிக்கையின்படி இக்கோவிலின் கடவுளுக்கு மஹாரக்ஞ தேவி, ரங்ஞ தேவி, ராஞ்சி, பகவதி என மேலும் பல பெயர்கள் உண்டு.