ரியாசி மாவட்டம்
ரியாசி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரியாசி மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
நிறுவியது | ஏப்ரல் 2007 |
மாவட்டத் தலைமையிடம் | ரியாசி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,719 km2 (664 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 3,14,667 |
• அடர்த்தி | 180/km2 (470/sq mi) |
இனம் | Languages |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | http://reasi.gov.in/ |
ரியாசி மாவட்டம் (Reasi district), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடம் ரியாசி நகரம் ஆகும். இம்மாவட்டம் ஜம்மு பகுதியில் உள்ள பத்து மாவட்டங்களில் ஒன்றாகும்.
எல்லைகள்
[தொகு]1,719 சதுர கிலோ மீட்டர் கொண்ட ரியாசி மாவட்டத்தின் கிழக்கில் உதம்பூர் மாவட்டம் மற்றும் இராம்பன் மாவட்டம், தெற்கில் ஜம்மு மாவட்டம், மேற்கில் ரஜௌரி மாவட்டம், வடக்கில் குல்காம் மாவட்டம் எல்லைகளாக கொண்டது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ரியாசி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 314,667 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 166,461 ஆகவும், பெண்கள் 148,206 ஆகவும் உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி 27.04% உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 183 ஆக உள்ளது. சராசரி எழுத்தறிவு 58.15% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 68.38% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 46.59% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 890 வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 55,799 ஆக உள்ளது.[2]
சமயம்
[தொகு]ரியாசி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 153,898 (48.91 %) ஆகவும், இசுலாமியர்கள் 156,275 (49.66 %), சீக்கியர்கள் 3,107 (0.99 %) மற்றவர்கள் 0.38% ஆகவும் உள்ளனர்.
போக்குவரத்து
[தொகு]தற்போது மாநில சாலைகள், ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளை ரியாசி மாவட்டம் இணைக்கிறது.
தொடருந்து திட்டம்
[தொகு]ஜம்மு - ஸ்ரீநகர் - பாரமுல்லாவை இணைக்கும் காஷ்மீர் தொடருந்து திட்டம், ரியாசி மாவட்டம் வழியாக செல்லும் வகையில் 4 சூலை 2014இல் தொடங்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]ரியாசி மாவட்டம் 230 மற்றும் 60 வருவாய் கிராமங்களை கொண்ட ரியாசி மற்றும் கூல்-குலாப்கர் என வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது.
இம்மாவட்டம் அர்னாஸ், மகாஹோர், ரியாசி மற்றும் பௌனி என நான்கு ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.[3] [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|ஊராட்சி ஒன்றியங்கள் பல ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.
அரசியல்
[தொகு]ரியாசி மாவட்டம் ரியாசி, குலாகர் மற்றும் கூல்-அர்னாஸ் என மூன்று சட்டமன்ற தொகுதிகளை உடையது.[4]
பார்க்க வேண்டிய இடங்கள்
[தொகு]- வைஷ்ணவ தேவி கோயில்
- பீம்கர் கோட்டை
- சிவகோரி கோயில்
- காளிகா கோயில்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Census of India 2011
- ↑ http://www.census2011.co.in/census/district/638-reasi.html
- ↑ Statement showing the number of blocks in respect of 22 Districts of Jammu and Kashmir State including newly Created Districts பரணிடப்பட்டது 2008-09-10 at the வந்தவழி இயந்திரம் dated 2008-03-13, accessed 2008-08-30
- ↑ "ERO's and AERO's". Chief Electoral Officer, Jammu and Kashmir. பார்க்கப்பட்ட நாள் 2008-08-28.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website of J&K Govt பரணிடப்பட்டது 2017-09-15 at the வந்தவழி இயந்திரம்
- ரியாசி மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2009-04-10 at the Library of Congress Web Archives
- Google Maps Reasi
- [1] List of places in Reasi