புல்வாமா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புல்வாமா மாவட்டம்
மாவட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தின் அமைவிடம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
தலைமையிடம்புல்வாமா
பரப்பளவு
 • மொத்தம்1,086 km2 (419 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,60,440
 • அடர்த்தி520/km2 (1,300/sq mi)
 • எழுத்தறிவு63.48%
இணையதளம்http://pulwama.nic.in

புல்வாமா மாவட்டம் (Pulwama district), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடம் புல்வாமா நகரமாகும்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

புல்வாமா மாவட்டம் 1086 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டதாகும். இம்மாவட்டத்தில் அவந்திபோரா, பாம்போரா, புல்வாமா மற்றும் டிரால் போன்ற நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.[1] மேலும் இம்மாவட்டம் டிரால், கெல்லர், பாம்போரா, புல்வாமா மற்றும் கக்கபோரா என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.[2]

மாவட்ட எல்லைகள்[தொகு]

புல்வாமா மாவட்டத்தின் வடக்கில் ஸ்ரீநகர் மாவட்டம், தெற்கில் குல்காம் மாவட்டம், மேற்கில் பட்காம் மாவட்டம், தென்மேற்கில் சோபியான் மாவட்டம், கிழக்கில் அனந்தநாக் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

அரசியல்[தொகு]

புல்வாமா மாவட்டம் டிரால், பாம்போரா, புல்வாமா, இராஜ்போரா என நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புல்வாமா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,60,440 ஆக உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், 640 இந்திய மாவட்டங்களில் புல்வாமா மாவட்டம் 535வது இடத்தில் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள் 53,234 ஆக உள்ளனர். இம்மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 516 ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 912 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 63.48% விழுக்காடாக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 74.36% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 51.80% ஆகவும் உள்ளது. [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்வாமா_மாவட்டம்&oldid=3564269" இருந்து மீள்விக்கப்பட்டது