சேஷ்நாக் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேஷ்நாக் ஏரி
அமைவிடம்அனந்தநாக் மாவட்டம், காஷ்மீர் சமவெளி, இந்தியா
ஆள்கூறுகள்34°05′37″N 75°29′48″E / 34.093697°N 75.496686°E / 34.093697; 75.496686ஆள்கூறுகள்: 34°05′37″N 75°29′48″E / 34.093697°N 75.496686°E / 34.093697; 75.496686
வகைபனிமலை ஏரி
முதன்மை வரத்துபனி உருகுதல்
முதன்மை வெளிப்போக்குலித்தர் ஆறு
அதிகபட்ச நீளம்1.1 கிலோமீட்டர்கள் (0.68 mi)
அதிகபட்ச அகலம்0.7 கிலோமீட்டர்கள் (0.43 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,590 மீட்டர்கள் (11,780 ft)
உறைவுடிசம்பர் முதல் மார்ச் முடிய

சேஷ்நாக் ஏரி (Sheshnag Lake) (சமசுகிருதம்: शेषनाग झील) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் இமயமலையில் அமைந்த நன்னீர் ஏரியாகும்.[1] இந்த ஏரி இமயமலையின் அடிவார நகரமான பகல்காமிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமர்நாத் செல்லும் வழியில் இமயமலையில் 3,590 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேஷ்நாக் ஏரி 1.1 கிலோ மீட்டர் நீளம், 0.07 கிலோ மீட்டர் அகலம் கொண்டது.

புராண வரலாறு, புவியியல்[தொகு]

இந்து சமய புராணங்களின் படி, சேஷ்நாக் எனில் பாம்புகளின் அரசனான ஆதிசேஷன்[2][3] இந்த ஏரியில் உறைந்து வாழ்பவர் என இந்துக்களின் தொன்மை நம்பிக்கை ஆகும்.[4] சேஷ்நாக் ஏரி இந்துக்களின் தொன்மையான புனித யாத்திரை தலங்களில் ஒன்றான அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

சேஷ்நாக் ஏரி பல வகையான மீன் இனங்களை கொண்டது. [5] [6] குளிர்காலத்தில் கடும் பனிப் பொழிவினால் இந்த ஏரி பனியால் உறைந்து விடுகிறது.[7] கோடைகாலத்தில் இவ்வேரியின் பனிகட்டிகள் உருகி பகல்காம் நகரத்தில் லித்தர் ஆறாக பாய்கிறது.

போக்குவரத்து[தொகு]

சேஷ்நாக் ஏரி காஷ்மீரிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும், அனந்தநாக் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும், அமர்நாத் செல்லும் இமயமலையின் அடிவார நகரமான பகல்கம் நகரத்திலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும், பஞ்சதரணிக்கு தெற்கே 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[8]பகல்காம் நகரத்திலிருந்து அமர்நாத் அடிவாரப் பகுதியான சந்தன்வாரி எனுமிடதிற்கு சிற்றுந்துகள் மூலம் அடைந்து, பின் சந்தன்வாரியிலிருந்து ஏழு கிலோ தொலைவில் உள்ள சேஷ்நாக் ஏரியை குதிரைகள் அல்லது பல்லக்குகள் மூலம் அடையலாம். அமர்நாத் குகைக் கோயில் சேஷ்நாக் ஏரியிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சூன் மாதம் முதல் செப்டம்பர் முடிய சேஷ்நாக் ஏரியை பார்க்க நல்ல காலம் ஆகும். டிசம்பர் முதல் மார்ச்சு மாதம் வரை ஏரி பனிகட்டியால் உறைந்து விடும்.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Raina, HS; KK Vass (May–June 2006). "Some biological features of a freshwater fairy shrimp, Branchinecta schantzi, Mackin, 1952 in the Northwestern Himalayas, India". J. Indian Inst. Sci. 86: 287–291. http://journal.library.iisc.ernet.in/vol200603/paper9/287.pdf. பார்த்த நாள்: 23 April 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Indian Mythology; Hindu Myrhology: Sheshnag". webonautics.com. 2012-04-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sheshnag Lake". yahoo.com. 2014-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. Bhag-P 5.25.1
  5. "Fishes and Fisheries in high altitude lakes, Vishansar, Gadsar, Gangabal, Krishansar". Fao.org. 1999 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  6. Petr, ed. by T. (1999). Fish and fisheries at higher altitudes : Asia. Rome: FAO. பக். 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:92-5-104309-4. http://books.google.com/?id=Z4HESCeJyZcC&pg=PA72&dq=Vishansar+Lake#v=onepage&q=Vishansar%20Lake&f=false. 
  7. "Pahalgam Sheshnag". cambaytours.com. 2012-04-23 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Travel to Sheshnag lake". travelomy.com. 2013-01-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி ஒளிதங்கள்
Amarnath yatra Sheshnag lake on Youtube
[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேஷ்நாக்_ஏரி&oldid=3320032" இருந்து மீள்விக்கப்பட்டது