எல்லைத் தகராறு
பிராந்திய தகராறு அல்லது எல்லைத் தகராறு (Territorial dispute அல்லது boundary dispute) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் அல்லது அரசுகள் இடையே நிலத்தை வைத்திருப்பது அல்லது கட்டுப்படுத்துவது பற்றிய கருத்து வேறுபாடு ஆகும்.
சூழல் மற்றும் வரையறைகள்
[தொகு]எல்லைத் தகராறுகள் பெரும்பாலும் ஆறுகள், வளமான வேளாண் நிலங்கள், கனிம அல்லது பெட்ரோலிய வளங்கள் போன்ற இயற்கை வளங்களை வைத்திருப்பதுடன் தொடர்புடையவை. இருப்பினும் எல்லை சர்ச்சைகளானது பண்பாடு, சமயம், இன தேசியவாதத்தால் உந்தப்படலாம். எல்லைத் தகராறுகள் பெரும்பாலும் அசல் எல்லைப் பிரிப்பு ஒப்பந்தத்தில் தெளிவற்ற விளக்கத்தின் விளைவாகும்.
எல்லைத் தகறாறுகளானது போர்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஏனெனில் அரசுகள் பெரும்பாலும் படையெடுப்பு மூலம் ஒரு பிரதேசத்தின் மீது தங்கள் இறையாண்மையை உறுதிப்படுத்த முயல்கின்றன. மேலும் அரசு சாரா அமைப்புகள் பயங்கரவாதத்தின் மூலம் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்கின்றன. ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பை இணைப்பதற்கு பலப்பிரயோகம் செய்வதை சர்வதேச சட்டம் ஆதரிக்கவில்லை. ஐ.நா சாசனம் கூறுகிறது, "அனைத்து உறுப்பினர்களும் எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது சக்தியைப் பயன்படுத்துதல் அல்லது ஐக்கிய நாடுகள் அவையின் நோக்கங்களுக்கு முரணான வேறு எந்த வகையிலும் தங்கள் சர்வதேச செயல்களை தவிர்க்க வேண்டும்."
தைவான் நீரிணை மற்றும் காஷ்மீர் போன்ற எல்லைகள் வரையறுக்கப்படாத சில பகுதிகளில், சம்பந்தப்பட்ட பிரிவினர் ஒரு கட்டுப்பாட்டுக் கோட்டை வரையறுக்கின்றனர். இது நடைமுறையில் சர்வதேச எல்லையாக செயல்படுகிறது.