ஜம்மு காஷ்மீர் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜம்மு காஷ்மீர் அரசு
அரசு முத்திரை
Jammu-Kashmir-flag.svg
மாநில கொடி
தலைமையிடம் ஜம்மு (மழைக்காலம்)
சிறிநகர் (கோடைகாலம்)
செயற்குழு
ஆளுநர் நரேந்தர் நாத் வோரா
முதலமைச்சர் மெகபூபா முப்தி
துணை முதலமைச்சர் தாரா சந்து
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
  • இரு அவைகள்
உறுப்பினர்கள் 89
மேலவை 36
நீதித்துறை
உயர் நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதி மகேஷ் மிட்டல் குமார்

ஜம்மு காஷ்மீர் அரசு என்பது சம்மு காசுமீர் மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது சட்டம் இயற்றும் பிரிவு, நீதித் துறை, செயலாக்கப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இந்த மாநிலம் இரு தலைநகரங்களைக் கொண்டது. கோடை காலத்தில் ஸ்ரீநகரிலும், மழைக்காலத்தில் ஜம்முவிலும் சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடத்தப்படும்.

சட்டம் இயற்றும் பிரிவு[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம்

சட்டமன்றத்தில் 89 உறுப்பினர்களும், சட்ட மேலவையில் 36 உறுப்பினர்களும் உள்ளனர்.

நீதித் துறை[தொகு]

இந்த மாநிலத்தில் நீதித் துறையின் உயர் அமைப்பாக ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் திகழ்கிறது. இது ஸ்ரீநகரிலும் ஜம்முவிலும் கிளைகளைக் கொண்டுள்ளது.[1]

செயலாக்கம்[தொகு]

மத்திய அரசின் அறிவுரையின்படி இந்தியக் குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிப்பார். மாநில அரசின் தலைவராக ஆளுநர் கருதப்பட்டாலும், இந்த பதவிக்கு அதிக அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுப்பர். இவருக்கு மாநில அரசில் அதிக அதிகாரம் இருக்கும். ஏப்பரல் 3, 2016 முதல் மெகபூபா முப்தி என்பவர் முதல்வராக உள்ளார்.[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்மு_காஷ்மீர்_அரசு&oldid=2047158" இருந்து மீள்விக்கப்பட்டது