அசாம் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Government of Assam
அரசாங்க இருக்கைகுவகாத்தி
சட்டம்
சட்டப் பேரவை
சபாநாயகர்பிசுவசித் டைமேரி[1]
துணை சபாநாயகர்நுமல் மோமின்[2]
சட்டமன்றத்தில் உறுப்பினர்கள்126
செயல்
ஆளுநர்குலாப் சந்த் கட்டாரியா[3]
முதலமைச்சர்ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா[4]
தலைமைச் செயலாளர்பபன் குமார் போர்தாகூர், IAS[5]
நீதித்துறை
உயர் நீதிமன்றம்குவகாத்தி உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிவிஜய் பிசுனோய்

அசாம் அரசு அல்லது அஸ்ஸாம் அரசு (Government of Assam) என்பது இந்திய மாநிலமான அசாம் மாநில அரசாகும். இது அசாம் ஆளுநர் தலைமையிலான நிர்வாகக் குழு, நீதித்துறை மற்றும் சட்டமன்றக் கிளை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இம்மாநிலத்தின் தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரைக் கொண்டுள்ளது, தற்போதைய ஆளுநராக‌ குலாப் சந்த் கட்டாரியா இருக்கின்றார்.

அரசாங்கத்தின் தலைவராக முதலமைச்சர் இருக்கின்றார், தற்போதைய முதலமைச்சராக ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா இருக்கின்றார்.[4]

இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் வங்காள மொழி (அசாமிய எழுத்துமுறை) ஆகியன அசாமின் அலுவல்முறை மொழிகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Speakers since 1937". assamassembly.gov.in.
  2. "List of Deputy Speakers since 1937". assamassembly.gov.in.
  3. "The Governor of Assam, Assam gov portal".
  4. 4.0 4.1 "Assam Legislative Assembly – Chief Ministers since 1937". assamassembly.gov.in.
  5. PTI (2022-09-01). "New Assam chief secretary Paban Kumar Borthakur takes charge". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.

அதிகாரப்பூர்வ இணைய தளம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_அரசு&oldid=3895243" இலிருந்து மீள்விக்கப்பட்டது