நுமல் மோமின்
Appearance
முனைவர். நுமல் மோமின் | |
---|---|
![]() மத்திய பணியாளர் தேர்வாணையக் கழக தேர்வுகளுக்கான இலவச பயிற்சியில் பங்குபெற உள்ள மாணவர்களிடம் உரையாற்றும் மோமின் | |
அசாம் சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மே 2021 | |
முன்னையவர் | அமினுல் ஏக் லசுகார் |
அசாம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
முன்னையவர் | கிளெங்டான் எங்டி |
தொகுதி | போகாஜான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 பெப்ரவரி 1972 தில்லாவாசன் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அனுபமா ஏசாங் |
முன்னாள் மாணவர் | கௌகாத்தி மருத்துவக் கல்லூரி |
பணி | அரசியல்வாதி |
நுமல் மோமின் (Numal Momin) (பிறப்பு: 25 பெப்ரவரி 1972) அசாமில் உள்ள அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர் ஆவார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டசபைத் தேர்தலில் இவர் போகாஜான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் அசாம் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் உள்ளார்.[1][2][3]
பின்னணி
[தொகு]மோமின் தனது பள்ளிக்கல்வியை 1989 ஆம் ஆண்டில் போகாஜனில் உள்ள பாலிபதார் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் மருத்துவத்தில் தனது இளங்கலைப் பட்டத்தை கௌகாத்தி மருத்துவக் கல்லூரியில் 1999 ஆம் ஆண்டில் முடித்தார். கவுகாத்தி மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். 2006 ஆம் ஆண்டில் இவர் அசாம் மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறையில் தனது முதுகலைப்பட்டத்தையும் பெற்றார். [4]இவர் அனுபமா ஏசாங்கை மணந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Karbi Anglong BJP unit formed". Archived from the original on 2019-02-15. Retrieved 2022-01-12.
- ↑ "Assam to develop mechanism to reach out to 'small communities'". Archived from the original on 2017-05-20. Retrieved 2017-06-26.
- ↑ MLAs, security officials visit India-Bangla border
- ↑ "Numal Momin bio". National Election Watch.