கோவா அரசு
Jump to navigation
Jump to search
செயற்குழு | |
---|---|
ஆளுநர் | மிருதுளா சின்கா |
முதலமைச்சர் | மனோகர் பாரிக்கர் |
துணை முதலமைச்சர் | பிரான்சிஸ் டி சவுசா |
சட்டவாக்க அவை | |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | பம்பாய் உயர் நீதிமன்றம் |
கோவா அரசு என்பது கோவா மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, சட்டம் இயற்றும் அவை, செயலாக்கப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது.
சட்டவாக்கம்[தொகு]
கோவாவின் சட்டவாக்க அவை ஓரவை முறைமை உடையது. அதாவது, சட்டமன்றத்தை மட்டுமே கொண்டது. ஈரவை முறைமை கொண்ட மாநிலங்களில் சட்டமன்றமும், சட்ட மேலவையும் இயங்குகின்றன. இந்த சட்டமன்றத்தில் நாற்பது உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினர்களாக்கப்படுவர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் நீடிப்பர்.