1999 இந்தியப் பொதுத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 543 தொகுதிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 619,536,847 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 59.99% 1.98 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
இந்தியக் குடியரசின் பதின்மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் 1999 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பதின்மூன்றாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. முன்பு ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அடல் பிகாரி வாச்பாய் மீண்டும் பிரதமரானார்.
பின்புலம்
[தொகு]இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். முந்தைய தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாஜக கூட்டணி ஒரே ஆண்டுக்குள் மீண்டும் கவிழ்ந்தது. அந்த கூட்டணி கட்சியில் அங்கம் வகித்த தமிழகத்தை சேர்ந்த அதிமுக கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. நாடாளமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு மீண்டும் கவிழ்ந்தது. ஆனால் காங்கிரசு தலைவி சோனியா காந்தியாலும் அரசு அமைக்கத் தேவையான ஆதரவினைத் திரட்ட இயலவில்லை. எனவே நாடாளமன்றம் கலைக்கப்பட்டு அதிகார பூர்வமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இடைக்கால காபந்து பிரதமராக வாஜ்பாய் இருந்த போது தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் மூண்டது. இந்த போரை சிறப்பாக கையாண்ட முறையை பாராட்டி வாஜ்பாய் அவர்கள் மீது இந்திய மக்களிடமும், அரசியல் தலைவர்களிடமும் ஏற்பட்ட ஆதரவு பெருக்கினால் தேஜகூ வலுவான கூட்டணி அமைந்திருந்ததாலும் செப்டம்பர் 1999 ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 270 இடங்களைப் பெற்றது. வெற்றி பெற்ற இதரக்கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் வாஜ்பாய் மீண்டும் இந்திய பிரதமராகினார். இந்தியா சுதந்திரத்திற்க்கு பின் காங்கிரசை எதிர்த்து முழுமையாக ஐந்து வருடம் நிலையான ஆட்சி செய்த முதல் கட்சி என்ற பெயரை பாஜக பெற்றது.
முடிவுகள்
[தொகு]கட்சி | வாக்குகள் | % | மாற்றம் | இடங்கள் | மாற்றம் | |
தேசிய ஜனநாயக கூட்டணி | 135,103,344 86,562,20911,282,084 5,672,412 6,298,832 4,378,536 9,363,785 2,377,741 2,002,700 1,620,527 454,481 2,502,949 1,364,030 40,997 1,182,061 |
37.06 23.753.10 1.56 1.73 1.20 2.57 0.65 0.55 0.44 0.12 0.69 0.37 0.01 0.32 |
-0.15 –1.84* -0.21 +0.29 +0.20 +0.15 +0.23 * — -0.09 -0.12 * -0.68 -0.03 |
270 18221 15 12 10 8 5 5 4 4 2 2 0 0 |
+16 —* +9 +6 +1 +1 — * +1 +1 -6 * -3 — | |
பாஜக ஆதரவு கட்சிகள் | 13,297,370 |
3.65 |
+0.88 |
29 |
+12 | |
இந்திய தேசிய காங்கிரசு | 103,120,330 | 28.30 | +2.48 | 114 | -27 | |
காங்கிரசு ஆதரவு கட்சிகள் | 18,753,722 7,046,95310,150,492 — 365,313 357,402 833,562 |
5.15 1.932.79 — 0.10 0.10 0.23 |
+4.83 +0.10+0.01 — +0.01 — +0.01 |
21 107 — 1 1 2 |
+18 -8-7 — +1 — — | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 19,695,767 | 5.40 | +0.24 | 33 | +1 | |
சமாஜ்வாதி கட்சி | 13,717,021 | 3.76 | -1.17 | 26 | +6 | |
பகுஜன் சமாஜ் கட்சி | 15,175,845 | 4.16 | –0.51 | 14 | +9 | |
மற்றவர்கள்
|
24,826,373 8,260,3115,395,119 1,500,817 1,288,060 818,713 3,332,702 1,220,698 692,559 448,165 396,216 298,846 297,337 282,583 264,002 222,417 107,828 |
6.79 2.271.48 0.41 0.35 0.22 0.91 0.33 0.19 0.12 0.11 0.08 0.08 0.08 0.07 0.06 0.03 |
* *-0.27 -0.14 +0.02 * * +0.08 * -0.01 +0.03 +0.01 -0.24 +0.01 +0.05 +0.01 — |
30 84 3 2 2 1 1 1 1 1 1 1 1 1 1 1 |
* *-5 -2 — * * +1 * — +1 +1 — — +1 — — | |
வெற்றி பெறாத கட்சிகள் | 10,751,176 | 2.99 | — | 0 | — | |
சுயெட்சைகள் | 9,996,386 | 2.74 | +0.37 | 6 | — | |
நியமிக்கப்பட்ட ஆங்கிலோ-இந்தியர்கள் | — | — | — | 2 | — | |
Total | 364,437,294 | 100% | 545 |