இந்தியப் பொதுத் தேர்தல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியக் குடியரசில் பொதுத் தேர்தல்கள் (General elections in India) எனபது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை உறுப்பினர்கள் இந்திய குடிமக்கள் நேரடி வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யும் தேர்தல்களைக் குறிக்கும். மக்களவையில் பெரும்பான்மை பெறும் கட்சி அல்லது கூட்டணி நாட்டுத் தலைவராக இந்தியப் பிரதமரைத் தேர்ந்தெடுக்கிறது.

மக்களவையின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்பதால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடைபெறும். ஆனால் ஒரு மக்களவை பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கலைக்கப்பட்டு புதிதாக தேர்தல்கள் நடத்தப்படலாம். ஒரு அரசு மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று பெரும்பான்மையை இழப்பதாலும் அல்லது தானாகவே முன்வந்து பதவி விலகுவதாலும் இந்நிலை ஏற்பட வாய்ப்புண்டு. பொதுத்தேர்தல்களில் 18 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமக்களும் வாக்களிக்கலாம். நாடு முழுவதும் 543 தொகுதிகளிலிருந்து தொகுதிக்கு ஒரு உறுப்பினர் வீதம் 543 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுத் தேர்தல் நாடு முழுவதிலும் ஒரே நேரத்திலோ அல்லது பல கட்டங்களாகவோ நடத்தப்படலாம். இத்தேர்தல்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன]]. 1999 பொதுத் தேர்தல் வரை காகித வாக்குச்சீட்டு முறையினால் நடைபெற்ற வாக்கெடுப்பு தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் மூலம் நடை பெறுகிறது.

மேலும் காண்க[தொகு]