இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1979 என்பது ஆண்டின் மத்தியில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. இந்தப் பதவிக்கு முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதிமுகம்மது இதயத்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், ஆகத்து 27, 1979 அன்று தேர்தல் நடந்திருக்கும்.
முகம்மது இதயத்துல்லா 1979 ஆகத்து 9 அன்று துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் 31 ஆகத்து 1979 அன்று பதவியேற்றார்.[2]