2017 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2017

← 2012 5 ஆகத்து 2017 2022 →
வாக்களித்தோர்98.21%
 
கட்சி பா.ஜ.க சுயேச்சை
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)
விழுக்காடு 67.89% 32.11%

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

முகம்மது அமீத் அன்சாரி
காங்கிரசு

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

வெங்கையா நாயுடு
பா.ஜ.க

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல், 2012 என்பது இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆகத்து 5, 2017 அன்று நடைபெற்ற தேர்தலாகும். இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மாநிலங்களவை பொதுச்செயலாளர் ஷும்ஷர் கே. ஷெரிப் 15வது துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்.[1]

குடியரசுத் துணைத் தலைவர் முகம்மது அமீத் அன்சாரி, தனது இரண்டாவது பதவிக்காலத்தை 10 ஆகத்து 2017[2] நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்றட்ஜ் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்று, இந்தியாவின் 13வது குடியரசுத் துணைத் தலைவர் 11 ஆகத்து 2017 அன்று புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் கூடத்தில் பதவியேற்றார்.

பின்னணி[தொகு]

பதவி விலகும்குடியரசுத் துணைத் தலைவர் அமீது அன்சாரி

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மாநிலங்களவையின் (இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபை) அதிகாரபூர்வ தலைவர் மற்றும் அதன் சபாநாயகராகச் செயல்படுகிறார். இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி காலியானால் இவர் அப்பதவியை ஏற்று அதிகபட்சமாக ஆறு மாதங்கள் பதவியிலிருந்துகொண்டு குடியரசுத் தலைவரின் அனைத்துப் பணிகளையும் செய்வார். குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகள்.[3]

தேர்தலின் போது, குடியரசுத் துணைத் தலைவராக இருந்தவர் முகம்மது அமீது அன்சாரி. இவர் 2007-ல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 2012-ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் ஆகத்து 10, 2017 அன்று முடிவடைந்தது. ஆகத்து 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் செயல்முறை[தொகு]

மாநிலங்களவை (இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபை) மற்றும் மக்களவை உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை) உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர்களால் குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குறிப்பிடப்பட்ட அவையின் நியமன உறுப்பினர்களும் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்.[4] தேர்தலில், ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிப்பதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் விருப்பத்தைக் குறிக்கும் வகையில், "சிறப்புப் பேனா" பயன்படுத்துவர்.[5]

2017 தேர்தல் வாக்காளர்கள்

 • மாநிலங்களவை உறுப்பினர்கள்: 233 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 12 பேர் பரிந்துரைக்கப்பட்டவர்கள்
 • மக்களவை உறுப்பினர்கள்: 543 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

வேட்பாளர்கள்[தொகு]

தேர்தலில் பங்கேற்கும் ஒரு வேட்பாளரை முன்மொழியக் குறைந்தபட்சம் 20 வாக்காளர்களின் ஆதரவு தேவை. மேலும் 20 பேர் வழிமொழிபவர்களாகவும் இருக்கவேண்டும். வேட்பாளர் பாதுகாப்பு வைப்புத் தொகையாக ₹15000 ($233) செலுத்த வேண்டும்.[6] இத்தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர். ஒரு வேட்பாளரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மற்றொருவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் முன்மொழிந்தது .

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்[தொகு]

வெங்கையா நாயுடுவைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிறுத்தியது. இவர் அப்போதைய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராகவும், இந்தியாவின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சராகவும் இருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார். நாயுடு பதவிக்குப் பொருத்தமானவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.[7] இந்தியன் எக்சுபிரசு கருத்துப்படி, நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டால் அது தென்னிந்திய மாநிலங்களான தெலங்காணா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கட்சிக்கு மன உறுதியை அளிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் கருதுகின்றனர்.[8] என்டிஏ, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிகள் தவிர அதிமுக, தெலுங்கானா இராட்டிர சமிதி ஆகிய கட்சிகளும் நாயுடுவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தன. தேர்தலில் வெற்றி பெற 394 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், நாயுடு 489 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நியூஸ்18 எழுதியது.[9]

பெயர் பிறந்தது தற்போதைய அல்லது முந்தைய நிலைகள் மாநிலம் அறிவித்தது மேற்கோள்
வெங்கையா நாயுடு சூலை 1, 1948 (1948-07-01) (அகவை 75)நெல்லூர், ஆந்திரப் பிரதேசம்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் (2016–2017)
நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் (2014–2017)
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர் (2014–2017)
ஊரக வளர்ச்சி அமைச்சர் (2000–2002)
கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் (1998-2016)
உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் (1978-1985)
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் (2002-2004)
நாடாளுமன்ற விவகார அமைச்சர் (2014–2016)
ஆந்திரப் பிரதேசம்
18 சூலை 2017 [10]

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்[தொகு]

கோபாலகிருஷ்ண காந்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக இருந்தார். இவர் 18 எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தார். இவர் இந்திய விடுதலை இயக்கத்தின் இரு முக்கிய பிரமுகர்களான மகாத்மா காந்தி மற்றும் சி. இராஜகோபாலாச்சாரி ஆகியோரின் பேரன் ஆவார். முன்னாள் இராஜதந்திரியான காந்தி, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் இலங்கை, நார்வே மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார். நந்திகிராம் வன்முறையின் போது மேற்கு வங்காளத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.[11] காந்திக்கு இந்தியத் தேசிய காங்கிரசு, ஐக்கிய ஜனதா தளம், இராச்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இடது முன்னணி ஆகிய கட்சிகளின் ஆதரவு இருந்தது.[12]

பெயர் பிறந்தது தற்போதைய அல்லது முந்தைய நிலைகள் மாநிலம் அறிவித்தது மேற்கோள்
கோபாலகிருஷ்ண காந்தி ஏப்ரல் 22, 1945 (1945-04-22) (அகவை 78)
தில்லி
மேற்கு வங்காளத்தின் 24வது ஆளுநர் (2004–2009) தில்லி 11 சூலை 2017 [13]

முடிவுகள்[தொகு]

தேர்தலைத் தொடர்ந்து, இந்தியாவின் 13வது துணைக் குடியரசுத் தலைவராக வெங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 11 ஆகத்து 2017 அன்று பதவியேற்றார்.[14] நாடாளுமன்றத்தில் உள்ள 790 இடங்களில் 5 இடங்கள் தேர்தலின் போது காலியாக இருந்தன.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2017-முடிவுகள்

வேட்பாளர்
கட்சி
பெற்ற வாக்குகள்
வாக்குகள் விகிதம்
வெங்கையா நாயுடு பாரதிய ஜனதா கட்சி 516 67.89
கோபாலகிருஷ்ண காந்தி சுயேச்சை 244 32.11
மொத்தம் 760 100.00
செல்லத்தக்க வாக்குகள் 760 96.82
செல்லாத வாக்குகள் 11 1.40
பதிவான வாக்குகள் 771 98.22
வாக்களிக்காதவர் 14 1.78
வாக்காளர்கள் 785

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Election to the Office of the Vice-President, 2017 (15th Vice-Presidential Election)". http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=166977. 
 2. "Terms of the Houses". eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம்/National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் May 23, 2016.
 3. "Vice President – Election, Powers and Functions". OM ABC. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.
 4. "How the Vice-President of India is elected: Know what it will take Venkaiah Naidu or Gopalkrishna Gandhi to win". Financial Express. பார்க்கப்பட்ட நாள் 24 July 2017.
 5. "Election Commission issues notification for vice president polls". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 26 July 2017.
 6. "What is the procedure to elect the vice president: All you need to know". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 26 July 2017.
 7. "Vice-Presidential Election 2017: Venkaiah Naidu is NDA's nominee, to take on Opposition's Gopalkrishna Gandhi". First Post. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
 8. "Keeping Rajya Sabha and South in mind, NDA names Venkaiah for vice-president". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
 9. "Venkaiah Naidu vs Gopalkrishna Gandhi: Here's How the 13th Vice President of India Will be Elected Today". News18. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
 10. "Venkaiah Naidu files his nomination for vice-president". Times of India. பார்க்கப்பட்ட நாள் 21 July 2017.
 11. "Indian Presidential Election 2017: Who Is Gopalkrishna Gandhi? Vice President Candidate Known For Straight Talk". NDTV. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
 12. "Vice-Presidential Election LIVE updates: Counting begins, 98 per cent polling recorded". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
 13. "Eye On Nitish Kumar, Opposition Picks Gopalkrishna Gandhi For Vice-President". NDTV. பார்க்கப்பட்ட நாள் 21 July 2017.
 14. Venkaiah Naidu To Become 13th Vice-President of India