ஜகதீப் தன்கர்
ஜக்தீப் தன்கர் | |
---|---|
![]() | |
28th மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 30 ஜூலை 2019[1] | |
முதலமைச்சர் | மம்தா பானர்ஜி |
முன்னவர் | கேசரிநாத் திரிபாதி |
இணை அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 1990–91 | |
பிரதமர் | சந்திரசேகர் |
அமைச்சர் | சத்ய பிரகாஷ் மாளவியா |
இணை அமைச்சர் | பாராளுமன்ற விவகாரத் துறை |
ராஜஸ்தான் சட்டமன்ற சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1993–1998 | |
தொகுதி | கிஷன்கர்ட், ராஜஸ்தான் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1989–1991 | |
முன்னவர் | முகமது அயூப் கான் |
பின்வந்தவர் | முகமது அயூப் கான் |
தொகுதி | சுன்சுனூ மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 18 மே 1951[2] சுன்சுனூ, இராஜஸ்தான் , இந்தியா |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
படித்த கல்வி நிறுவனங்கள் | ராஜஸ்தான் பல்கலைக்கழகம் |
பணி | அரசியல்வாதி |
தொழில் |
|
இணையம் | Governor's website |
ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) (பிறப்பு 18 மே 1951) ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமாவார். 2021 நிலவரப்படி, இவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராக பணியாற்றுகிறார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். மேலும் 1989 முதல் 1991 வரை மக்களவை [3] உறுப்பினராகவும் இருந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
தன்கர், 18 மே 1951 அன்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கித்தானா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். சித்தோர்கர் சைனிக் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், செய்ப்பூர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[4]
தொழில்[தொகு]
இவர். ராஜஸ்தானில் சுன்சுனூ மக்களவைத் தொகுதியிலிருந்து 1989-91இல் ஒன்பதாவது மக்களவையில், ஜனதா தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். ராஜஸ்தானின் கிஷன்கர்ட் தொகுதியிலிருந்து 1993-98இல் ராஜஸ்தானின் 10வது சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மேலும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முன்னாள் தலைவருமாவார்.[5] 30 ஜூலை 2019 அன்று, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவரை மேற்கு வங்க ஆளுநராக நியமித்தார்.
இதையும் பார்க்கவும்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Jagdeep Dhankar To Be Sworn In As New West Bengal Governor On July 30". என்டிடிவி. 26 July 2019. https://www.ndtv.com/india-news/jagdeep-dhankar-to-be-sworn-in-as-new-west-bengal-governor-on-july-30-2075543.
- ↑ "Jagdeep Dhankhar takes oath as West Bengal Governor". 30 July 2019. https://www.outlookindia.com/newsscroll/jagdeep-dhankhar-takes-oath-as-west-bengal-governor/1586269.
- ↑ "Our Governor: Raj Bhavan, West Bengal, India". Raj Bhavan, West Bengal, India. 15 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Jagdeep Dhankhar". 12 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Our Governor: Raj Bhavan, West Bengal, India". Raj Bhavan, West Bengal, India. 15 May 2021 அன்று பார்க்கப்பட்டது.