புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


Puducherry Park Monument retouched.jpg

இக்கட்டுரை
புதுவை அரசு மற்றும் புதுவை அரசியல்
என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

புதுச்சேரி முதல்வர்
பதவியில்
வே. நாராயணசாமி

6 சூன் 2016  முதல்
நியமிப்பவர்புதுச்சேரி ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்எட்வர்ட் குபேர்
உருவாக்கம்1 சூலை 1963

புதுச்சேரி முதலமைச்சர் அல்லது புதுவை முதல்வர்- இந்தியாவின் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பகுதி அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புதுவை மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரால் ஆளுமை புரிய அழைப்பதின் பேரில் புதுவையின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார்.

இவரே புதுச்சேரியின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பவர். ஆட்சிப் பகுதியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு ஆணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்தும் நிருவாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.

இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் புதுச்சேரியில் இடம்பெற்றுள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது.

இவருக்கு துணை புரிய எற்படுத்தபெற்ற அமைச்சரவைக்கென ஒதுக்கப்பெற்ற தனி துறைகளின் அமைச்சர்கள் அந்த துறைகளில் ஆளுமை புரிவர். இவர்கள் துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர். புதுச்சேரியின் தற்போதைய முதலமைச்சர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வி. நாராயணசாமி ஆவார்.

பாண்டிச்சேரி, புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்[தொகு]

கட்சிகளின் வண்ணங்கள்
எண். முதலமைச்சர்
தொகுதி
பணிக் காலப்பகுதி பணிக்காலம் கட்சி[n 1] தேர்தல் மேற்கோள்
1 எட்வர்ட் குபேர் 1 சூலை 1963 24 ஆகத்து 1964 1 ஆண்டு, 54 நாட்கள் இதேகா
2 வி. வெங்கடசுப்பா
நெட்டக்குப்பம்
11 செப். 1964 9 ஏப்ரல் 1967 2 ஆண்டுகள், 228 நாட்கள் 1964 [1]
3 பாரூக் மரைக்காயர்
காரைக்கால் வடக்கு
9 ஏப்ரல் 1967 6 மார்ச் 1968 0 ஆண்டுகள், 332 நாட்கள்
(2) வி. வெங்கடசுப்பா
நெட்டப்பாக்கம்
6 மார்ச் 1968 18 செப்டம்பர் 1968 0 ஆண்டுகள், 196 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
18 செப்டம்பர் 1968 17 மார்ச் 1969 0 ஆண்டுகள், 180 நாட்கள் இல்லை
(3) பாரூக் மரைக்காயர்
காலாப்பட்டு
17 மார்ச் 1969 3 சனவரி 1974 4 ஆண்டுகள், 292 நாட்கள் திமுக 1969 [2]
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
3 சனவரி 1974 6 மார்ச் 1974 0 ஆண்டுகள், 62 நாட்கள் இல்லை
4 சுப்பிரமணியன் ராமசாமி
காரைக்கால் தெற்கு
6 மார்ச் 1974 28 மார்ச் 1974 0 ஆண்டுகள், 22 நாட்கள் அஇஅதிமுக 1974 [3]
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
28 மார்ச் 1974 2 சூலை 1977 3 ஆண்டுகள், 96 நாட்கள் இல்லை
(4) சுப்பிரமணியன் ராமசாமி
காரைக்கால் தெற்கு
2 சூலை 1977 12 நவம்பர் 1978 1 ஆண்டு, 133 நாட்கள் அஇஅதிமுக 1977 [4]
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
12 நவம்பர் 1978 16 சனவரி 1980 1 ஆண்டு, 65 நாட்கள் இல்லை
5 எம். டி. ஆர். இராமச்சந்திரன்
மண்ணாடிப்பட்டு
16 சனவரி 1980 24 சூன் 1983 3 ஆண்டுகள், 159 நாட்கள் திமுக 1980 [5]
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
24 சூன் 1983 16 மார்ச் 1985 1 ஆண்டு, 265 நாட்கள் இல்லை
(3) பாரூக் மரைக்காயர்
லாசுப்பேட்டை
16 மார்ச் 1985 4 மார்ச் 1990 4 ஆண்டுகள், 353 நாட்கள் இதேகா 1985 [6]
(5) எம். டி. ஆர். இராமச்சந்திரன்
மண்ணாடிப்பட்டு
8 மார்ச் 1990 3 மார்ச் 1991 0 ஆண்டுகள், 364 நாட்கள் திமுக 1990 [7]
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
3 மார்ச் 1991 4 சூலை 1991 0 ஆண்டுகள், 123 நாட்கள் இல்லை
6 வி. வைத்தியலிங்கம்
நெட்டப்பாக்கம்
4 சூலை 1991 13 மே 1996 4 ஆண்டுகள், 314 நாட்கள் இதேகா 1991 [8]
7 ஆர். வி. ஜானகிராமன்
நெல்லித்தோப்பு
26 மே 1996 21 மார்ச் 2000 3 ஆண்டுகள், 313 நாட்கள் திமுக 1996 [9]
8 ப. சண்முகம்
ஏனாம்
22 மார்ச் 2000 15 மே 2001 1 ஆண்டு, 55 நாட்கள் இதேகா
24 மே 2001 26 அக்டோபர் 2001 0 ஆண்டுகள், 164 நாட்கள் 2001 [10]
9 ந. ரங்கசாமி
தட்டாஞ்சாவடி
27 அக்டோபர் 2001 12 மே 2006 4 ஆண்டுகள், 198 நாட்கள்
13 மே 2006 4 செப்டம்பர் 2008 2 ஆண்டுகள், 115 நாட்கள் 2006 [11]
(6) வி. வைத்தியலிங்கம்
நெட்டப்பாக்கம்
4 செப்டம்பர் 2008 16 மே 2011 2 ஆண்டுகள், 252 நாட்கள்
(9) ந. ரங்கசாமி
கதிர்காமம்
16 மே 2011 6 சூன் 2016 5 ஆண்டுகள், 20 நாட்கள் அஇநராகா 2011 [12]
10 வி. நாராயணசாமி
நெல்லித்தோப்பு
6 சூன் 2016 தற்போது பதவியில் 4 ஆண்டுகள், 171 நாட்கள் இதேகா 2016

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி[தொகு]

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி
வ.எண் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு காரணம்
01 குடியரசுத் தலைவர் ஆட்சி 18 செப்டம்பர் 1968 17 மார்ச் 1969 தேர்தலுக்காக
02 குடியரசுத் தலைவர் ஆட்சி 3 ஜனவரி 1974 6 மார்ச் 1974 தேர்தலுக்காக
03 குடியரசுத் தலைவர் ஆட்சி 28 மார்ச் 1974 2 ஜூலை 1977 அவசரகாலப் பிரகடனம்
04 குடியரசுத் தலைவர் ஆட்சி 12 நவம்பர் 1978 16 ஜனவரி 1980 அவசரகாலப் பிரகடனம்
05 குடியரசுத் தலைவர் ஆட்சி 24 ஜூன் 1983 16 மார்ச் 1985 அவசரகாலப் பிரகடனம்
06 குடியரசுத் தலைவர் ஆட்சி 4 மார்ச் 1991 3 ஜூலை 1991 தேர்தலுக்காக

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. இது முதலமைச்சரின் கட்சியின் பெயர். மாநில அரசின் கூட்டணிக் கட்சிகளுக்கு இவர் தலைமை தாங்குகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Statistical Report on General Election, 1964, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 2. "Statistical Report on General Election, 1969, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 3. "Statistical Report on General Election, 1974, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 4. "Statistical Report on General Election, 1977, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 5. "Statistical Report on General Election, 1980, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 6. "Statistical Report on General Election, 1985, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 7. "Statistical Report on General Election, 1990, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 8. "Statistical Report on General Election, 1991, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 9. "Statistical Report on General Election, 1996, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 10. "Statistical Report on General Election, 2001, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 11. "Statistical Report on General Election, 2006, to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.
 12. "Statistical Report on General Election, 2011, to the Legislative Assembly of Puducherry". Election Commission of India. Retrieved on 21 ஏப்ரல் 2014.