அரியானா முதலமைச்சர்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
அரியானா முதலமைச்சர்
| |
---|---|
நியமிப்பவர் | அரியானா ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | பி. டி. சர்மா |
உருவாக்கம் | 1 நவம்பர் 1966 |
அரியானா முதலமைச்சர், இந்திய மாநிலமான அரியானாவின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
1966 முதல் தற்போது வரை 10 பேர் அரியானா முதலமைச்சராக பணியாற்றியுள்ளனர். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பி. டி. சர்மா என்பவர் அரியானாவின் முதலமைச்சராக பணியாற்றினார். பான்சி லால் என்பவர் அரியானாவின் நீண்ட கால முதலமைச்சராக பணியாற்றினார். அரியானாவின் ஐந்தாவது முதலமைச்சரான சௌத்ரி தேவிலால் என்பவர் வி. பி. சிங் மற்றும் சந்திரசேகர் பிரதமர்களாக இருந்தபோது, இந்திய அரசின் துணைப் பிரதமராக இருந்தார்.
பின்பு அக்டோபர் 26, 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
அரியானா முதலமைச்சர்கள்[தொகு]
எண் | பெயர் | ஆட்சிக் காலம்[2] | கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | ||
---|---|---|---|---|---|---|
1 | பி. டி. சர்மா | 1 நவம்பர் 1966 | 23 மார்ச் 1967 | இந்திய தேசிய காங்கிரசு | 143 நாட்கள் | |
2 | பிரேந்தர் சிங் | 24 மார்ச் 1967 | 2 நவம்பர் 1967 | விசல் அரியானா கட்சி | 224 நாட்கள் | |
– | யாருமில்லை[3] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
2 நவம்பர் 1967 | 22 மே 1968 | இல்லை | ||
3 | பன்சி லால் | 22 மே 1968 | 30 நவம்பர் 1975 | இந்திய தேசிய காங்கிரசு | 2749 நாட்கள் | |
4 | பனர்சி தாஸ் குப்தா | 1 டிசம்பர் 1975 | 30 ஏப்ரல் 1977 | 517 நாட்கள் | ||
– | யாருமில்லை(குடியரசுத் தலைவர் ஆட்சி) | 30 ஏப்ரல் 1977 | 21 சூன் 1977 | இல்லை | ||
5 | சௌத்ரி தேவிலால் | 21 சூன் 1977 | 28 சூன் 1979 | ஜனதா கட்சி | 738 நாட்கள் | |
6 | பஜன்லால் | 29 சூன் 1979 | 22 சனவரி 1980 | 208 நாட்கள் | ||
22 சனவரி 1980 | 5 சூலை 1985 | இந்திய தேசிய காங்கிரசு | 1992 நாட்கள் | |||
(3) | பன்சிலால் | 5 சூலை 1985 | 19 சூன் 1987 | 715 நாட்கள் | ||
(5) | சௌத்ரி தேவிலால் | 17 சூலை 1987 | 2 டிசம்பர் 1989 | ஜனதா கட்சி | 870 நாட்கள் [மொத்தம்: 1608 நாட்கள்] | |
7 | ஓம்பிரகாஷ் சௌதாலா | 2 டிசம்பர் 1989 | 22 மே 1990 | 172 நாட்கள் | ||
(4) | பனர்சி தாஸ் குப்தா | 22 மே 1990 | 12 சூலை 1990 | 52 நாட்கள் [மொத்தம்: 569 நாட்கள்] | ||
(7) | ஓம்பிரகாஷ் சௌதாலா | 12 சூலை 1990 | 17 சூலை 1990 | 6 நாட்கள் | ||
8 | உகம் சிங் | 17 சூலை 1990 | 21 மார்ச் 1991 | 248 நாட்கள் | ||
(7) | ஓம்பிரகாஷ் சௌதாலா | 22 மார்ச் 1991 | 6 ஏப்ரல் 1991 | சமாஜ்வாடி ஜனதா கட்சி | 16 நாட்கள் | |
– | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
6 ஏப்ரல் 1991 | 23 சூலை 1991 | இல்லை | ||
(6) | பஜன்லால் | 23 சூலை 1991 | 9 மே 1996 | இந்திய தேசிய காங்கிரசு | 1752 நாட்கள் [மொத்தம்: 3952 நாட்கள்] | |
(3) | பன்சிலால் | 11 மே 1996 | 23 சூலை 1999 | அரியானா விகாஸ் கட்சி | 1169 நாட்கள் [மொத்தம்: 4633 நாட்கள்] | |
(7) | ஓம்பிரகாஷ் சௌதாலா | 24 சூலை 1999 | 4 மார்ச் 2005 | இந்திய தேசிய லோக் தளம் | 2051 நாட்கள் [மொத்தம்: 2245 நாட்கள்] | |
9 | பூபேந்தர் சிங் ஹூடா | 5 மார்ச் 2005 | 19 அக்டோபர் 2014 | இந்திய தேசிய காங்கிரசு | 3329 நாட்கள் | |
10 | மனோகர் லால் கட்டார் | 26 அக்டோபர் 2014 | தற்போது பதவியில் | பாரதிய ஜனதா கட்சி | 2282 நாட்கள் |
படங்கள்[தொகு]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Khattar sworn in". The Hindu (26 October 2014)
- ↑ http://legislativebodiesinindia.nic.in/STATISTICAL/Haryana.htm
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.