பல்வல் மாவட்டம்
பல்வல் மாவட்டம் पलवल जिला | |
---|---|
பல்வல்மாவட்டத்தின் இடஅமைவு அரியானா | |
மாநிலம் | அரியானா, இந்தியா |
தலைமையகம் | பல்வல் |
பரப்பு | 1,359 km2 (525 sq mi) |
மக்கட்தொகை | 1042708 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 767/km2 (1,990/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 235663 |
படிப்பறிவு | 69.32 % |
பாலின விகிதம் | 880 |
வட்டங்கள் | 3 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 2 தேசிய நெடுஞ்சாலை எண் 2 மற்றும் கேஎம்பி விரைவுச் சாலை |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 60–100 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பல்வல் மாவட்டம் (Palwal district) (இந்தி: पलवल जिला) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பல்வல் நகரம் ஆகும்.
அமைவிடம்
[தொகு]பல்வல் நகரம் தில்லியிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை எண் 2-இல் அமைந்துள்ளது. பல்வல் மாவட்டம் வடக்கே பரிதாபாத் மாவட்டம், வடகிழக்கே உத்தரப் பிரதேசத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டம், கிழக்கில் உத்தரப் பிரதேசத்தின் கயிர் வட்டம், தெற்கே மதுரா மாவட்டம், மேற்கே மேவாத் மாவட்டம், வடமேற்கே குர்கான் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.
தொன்ம வரலாறு
[தொகு]பல்வல் நகரம் பாண்டவர்களின் நாடான இந்திரப்பிரஸ்தத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]பல்வல் மாவட்டம் மூன்று வருவாய் உட்கோட்டங்களும் பல்வல், ஹொதல் மற்றும் ஹாத்தின் என மூன்று வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. மூன்று நகராட்சி மன்றங்களும், நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், 282 ஊராட்சிகளும் கொண்டது.
அரசியல்
[தொகு]இம்மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகள் பரிதாபாத் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்டது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,042,708 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.31% மக்களும்; நகரப்புறங்களில் 22.69% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.76% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 554,497 ஆண்களும் மற்றும் 488,211 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். 1,359 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 767 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 69.32% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 82.66% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 54.23% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 177,494 ஆக உள்ளது. [1]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 826,342 (79.25%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 3,971 (0.38%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 208,566 (20.00%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 932 (0.09%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 915 (0.09%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 345 (0.03%) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 20 (0.00%) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,617 (0.16%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
[தொகு]அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.