உள்ளடக்கத்துக்குச் செல்

கர்னால் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்னால் மாவட்டம்
करनाल जिला
ਕਰਨਾਲ ਜ਼ਿਲਾ
கர்னால்மாவட்டத்தின் இடஅமைவு ஹரியானா
மாநிலம்ஹரியானா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்ரோத்தக் கோட்டம்
தலைமையகம்கர்னால்
பரப்பு2,520 km2 (970 sq mi)
மக்கட்தொகை1505324 (2011)
மக்கள்தொகை அடர்த்தி597/km2 (1,550/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை30.21%
படிப்பறிவு74.73%
பாலின விகிதம்887
வட்டங்கள்5
மக்களவைத்தொகுதிகள்1 பானிபட் மாவட்டத்துடன்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கர்னால் மாவட்டம் (Karnal district) (இந்தி|करनाल जिला) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கர்னால் நகரம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

யமுனை ஆற்றின் கிழக்கு கரையில், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு எல்லையில் கர்னால் மாவட்டம் அமைந்துள்ளது. 2,520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதன் வடமேற்கில் குருச்சேத்திர மாவட்டம், மேற்கில் ஜிந்த் மாவட்டம் மற்றும் கைத்தல் மாவட்டம், தெற்கில் பானிபத் மாவட்டம் மற்றும் உத்தரப் பிரதேசம் எல்லைகளாக கொண்டது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

கர்னால் மாவட்டம் கர்னால், இந்திரி, அசந்து என மூன்று வருவாய் உட்கோட்டங்களையும், கர்னால், நீலோகேடி மற்றும் கரௌண்டா என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.

அரசியல்

[தொகு]

கர்னால் மாவட்டம் கர்னால், நீலோகேடி, இந்திரி, கரௌண்டா மற்றும் அசந்து என ஐந்து சட்டமன்ற தொகுதிகளையும், கர்னால் மக்களவைத் தொகுதியும் கொண்டது.[1]


பொருளாதாரம்

[தொகு]

நல்ல நீர் வளத்துடன் கூடிய மாவட்டம் என்பதால் கோதுமை, பார்லி, நெல் மற்றும் கரும்பு போன்ற வேளாண் பயிர்கள் பயிரிடப்படுகிறது.

போக்குவரத்து

[தொகு]

அரியானா மாநிலத்தலைநகர் சண்டிகர் மற்றும் நாட்டின் தலைநகர் புதுதில்லியுடன் தரைவழிப் போக்குவரத்தும், இருப்புப்பாதை தொடருந்து போக்குவரத்துகள் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கர்னால் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,505,324 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 69.79% மக்களும்; நகரப்புறங்களில் % மக்களும் 30.21% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 18.14% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 797,712 ஆண்களும் மற்றும் 707,612 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 887 பெண்கள் வீதம் உள்ளனர். 2,520 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 597 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 74.73% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.82% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 66.82% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 196,610 ஆக உள்ளது. [2]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,341,002 (89.08 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 31,650 (2.10 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 126,207 (8.38 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,049 (0.14 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,516 (0.10 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 532 (0.04 %) ஆகவும், பிற சமய மக்கள் தொகை 49 (0.00 %) மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,319 (0.15 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-19.
  2. District : Census 2011 data[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்னால்_மாவட்டம்&oldid=3547971" இலிருந்து மீள்விக்கப்பட்டது