உள்ளடக்கத்துக்குச் செல்

குர்கான் மாவட்டம்

ஆள்கூறுகள்: 28°15′N 77°10′E / 28.250°N 77.167°E / 28.250; 77.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்கான் மாவட்டம்
குருகிராம் மாவட்டம்
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து இடமாக:குருகிராம் நகரத்தின் கட்டிடங்கள் & நெடுஞ்சாலை, 2 பட்டோடி அருகில் புது சாலை, பரூக்நகர் அருகில் சீஸ் மகால் & தம்தமா ஏரி
அரியானா மாநிலத்தில் அமைவிடம்
அரியானா மாநிலத்தில் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
கோட்டம்குருகிராம்
தலைமையிடம்குருகிராம்
வருவாய் வட்டங்கள்1. குருகிராம், 2 சோக்னா 3 பட்டோடி 4 பரூக்நகர் 5 மனேசர்
அரசு
 • ஆணையர்இஆப[1]
பரப்பளவு
 • Total1,258 km2 (486 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total15,14,432
 • அடர்த்தி1,200/km2 (3,100/sq mi)
Demographics
 • எழுத்தறிவு84.4%
 • பாலின விகிதம்853
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
தேசிய நெடுஞ்சாலைகள்NH 48, NH 148A, NH 248A, NH 919
மக்களவைத் தொகுதிகுர்கான் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள்1. பட்டோடி 2 பாட்சாபூர் 3 குருகிராம் & 4 சோக்னா
இணையதளம்gurugram.gov.in


குர்கான் மாவட்டம் அல்லது குருகிராம் மாவட்டம், இந்திய மாநிலமான அரியானாவின் 23 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் குர்கானில் உள்ளது. இம்மாவட்டப் பகுதிகள் தில்லி தேசியத் தலைநகர் வலையப் பகுதியில் உள்ளது. இதன் தலைமையிடாமான குருகிராம் நகரம், புது தில்லிக்கு வடமேற்கே 30.8 கிலோமீட்டர் தொலைவிலும்; சண்டிகருக்கு தெற்கே 287 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

குருகிராம் மாவட்டம் குருகிராம், சோக்னா, பட்டோடி, பரூக்நகர் & மானேசர் என 5 வருவாய் வட்டங்களையும், குருகிராம், சோக்னா, பரூக்நகர் & பட்டோடி எனும் 4 ஊராட்சி ஒன்றியங்களையும், குருகிராம் மற்றும் மானேசர் எனும் 2 மாநகராட்சிகளையும், சோக்னா & பட்டோடி-மண்டி எனும் 2 நகராட்சிகளையும், பரூக்நகர் எனும் ஒரு பேரூராட்சியும் கொண்டுள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 326,428 குடியிருப்புகள் கொண்ட குருகிராம் மாவட்டத்தின் மக்கள் தொகை 1,514,432 ஆகும். அதில் 816,690 ஆண்கள் மற்றும் 697,742 பெண்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 854 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.8% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் முறையே 197,937 மற்றும் 0% ஆக உள்ளனர். இந்து சமயத்தினர் 93.03%, இசுலாமியர் 4.68%, சமணர்கள் 0.49%, பௌத்தர்கள் , கிறித்தவர்கள் 0.64%, சீக்கியர்கள் 1% மற்றும் பிற சமயத்தினர் 0.17% வீதம் உள்ளனர்[3]

அரசியல்

[தொகு]

இந்த மாவட்டம் பட்டௌதி, பாதுஷாபூர், குர்கான், சோஹ்னா, நுஹ், பிரோசாபூர் ஜிர்கா, புனஹானா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த மாவட்டம் குர்கான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4]

போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண்கள் NH 48, NH 148A, NH 248A மற்றும் NH 919 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.

சான்றுகள்

[தொகு]
  1. "Gurgaon District Administration". gurugram.gov.in. Retrieved 15 May 2024.
  2. Gurugram District Administrative Structure
  3. Gurgaon District Population, Caste, Religion Data (Hariyana) - Census 2011
  4. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-13.

இணைப்புகள்

[தொகு]

28°15′N 77°10′E / 28.250°N 77.167°E / 28.250; 77.167

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்கான்_மாவட்டம்&oldid=4455371" இலிருந்து மீள்விக்கப்பட்டது