உள்ளடக்கத்துக்குச் செல்

ரோத்தக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோத்தக் மாவட்டம்
रोहतक जिला
ரோத்தக்மாவட்டத்தின் இடஅமைவு அரியானா
28°32′N 76°20′E / 28.54°N 76.34°E / 28.54; 76.34 - 28°54′N 76°34′E / 28.90°N 76.57°E / 28.90; 76.57
மாநிலம்அரியானா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்ரோத்தக் கோட்டம்
தலைமையகம்[[ரோத்தக்]]
பரப்பு1,745 km2 (674 sq mi)
மக்கட்தொகை1061204 (2011)
மக்கள்தொகை அடர்த்தி608/km2 (1,570/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை45.04%
படிப்பறிவு80.22
பாலின விகிதம்867
வட்டங்கள்2
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
முதன்மை நெடுஞ்சாலைகள்தே நெ பத்து
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ரோத்தக் மாவட்டம் (Rohtak district) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ரோத்தக் நகரம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

அரியானா மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த ரோத்தக் மாவட்டத்தின் வடமேற்கில் தில்லியும், வடக்கில் சோனிபத் மாவட்டம் மற்றும் ஜிந்த் மாவட்டம் கிழக்கில் சஜ்ஜர் மாவட்டம் மற்றும் சோனிபத் மாவட்டம் மேற்கில் ஹிசார் மாவட்டம், பிவானி மாவட்டம் மற்றும் சிர்சா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

ரோத்தக் மாவட்டம் ரோத்தக் மற்றும் மேஹம் என இரண்டு வருவாய் வட்டங்களாகவும், ரோத்தக், சம்பாலா மேஹம், லக்கன்-மஜ்ஜ்ரா மற்றும் கலாநௌர் என நான்கு ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டது.

பொருளாதாரம்

[தொகு]

ரோத்தக் மாவட்டத்தின் நிலப்பரப்பில் 83 விழுக்காடு வேளாண்மை நிலங்களாக இருப்பதால், இங்கு கோதுமை, கரும்பு, பருப்பு வகைகள், பார்லி மற்றும் நவதானியங்கள் பயிரிடப்படுகிறது. 42.19 விழுக்காடு மக்கள் வேளாண்மையும், அதனைச் சார்ந்த தொழில்களையும் நம்பியுள்ளனர். 7.68% மக்கள் குடிசைத் தொழில்களையும், பிறர் வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஜப்பானிய தொழில் நகரியம்

[தொகு]

ரோத்தக் நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலை எண் 10-இல் அமைந்துள்ள மடினா கிராமத்தில் ஜப்பானிய பெருந் தொழில் மற்றும் வணிக நகரியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

புதுதில்லியிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரோத்தக் தொடருந்து நிலையம் இருப்புப்பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண் பத்து தரை வழியாக தில்லியையும் மற்றும் பஞ்சாபையும் இணைக்கிறது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,061,204 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 57.96% மக்களும்; நகரப்புறங்களில் 42.04% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.88% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 568,479 ஆண்களும் மற்றும் 492,725 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 867 பெண்கள் வீதம் உள்ளனர். 1,745 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 80.22% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.65% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 71.72% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 129,330 ஆக உள்ளது. [2]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,043,887 (98.37 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 3,916 (0.37 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 8,185 (0.77 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 732 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 3,491 (0.33 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 200 (0.02 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 24 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 769 (0.07 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோத்தக்_மாவட்டம்&oldid=3890811" இலிருந்து மீள்விக்கப்பட்டது