சர்க்கி தாத்திரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர்க்கி தாத்திரி
चरखी दादरी
மாவட்டம்
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் அமைவிடம்
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
நிறுவிய நாள்1 டிசம்பர் 2016
தலைமையிடம்சர்க்கி தாத்திரி
மக்கள்தொகை (2011)
 • Total5,02,276
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
சட்டமன்றத் தொகுதிகள்2
இணையதளம்https://charkhidadri.gov.in

சர்க்கி தாத்திரி மாவட்டம் (Charkhi Dadri District) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். அரியானா மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த இப்புதிய மாவட்டம் 01 டிசம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது. [1][2][3]இதன் நிர்வாகத் த்லைமையிடம் சர்க்கி தாத்திரி நகரம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இம்மாவட்ட தலைமையிடமான சர்க்கி தாத்திரி நகரம், தில்லிக்கு தென்மேற்கில் 113 கிமீ தொலைவிலும்; சண்டிகரிலிருந்து 295 கிமீ தொலைவிலும் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

சர்க்கி தாத்திரி மாவட்டம் சர்க்கி தாத்த்ரி மற்றும் பத்ரா எனும் இரண்டு வருவாய் வட்டங்களும், பௌந்து கலான் எனும் துணை வட்டமும் கொண்டது. [2][1]மேலும் இம்மாவட்டம் சர்க்கி தாத்திரி, பத்ரா, ஜோஜு, பௌந்து கலான் என 4 ஊராட்சி ஒன்றியகளையும், 172 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

20111-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,02,276 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 67.04% ஆகவுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]