உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிந்து மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிந்து மாவட்டம் மாவட்டம்
ஜிந்து மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு ஹரியானா
மாநிலம்ஹரியானா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஹிசார் கோட்டம்
தலைமையகம்ஜிந்து
பரப்பு2,702 km2 (1,043 sq mi)
மக்கட்தொகை1334152 (2011)
மக்கள்தொகை அடர்த்தி494/km2 (1,280/sq mi)
படிப்பறிவு71.44%
வட்டங்கள்1. ஜிந்து 2. ஜுலானா 3. நர்வானா 4. சபிதோன்
மக்களவைத்தொகுதிகள்1. சோனிபட் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
சராசரி ஆண்டு மழைபொழிவு434 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஜிந்து மாவட்டம் வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஜிந்து ஆகும். ஹிசார் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம் 1966-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.

உட்கோட்டங்களும் மாவட்டங்களும்

[தொகு]

ஜிந்து மாவட்டம் மூன்று ஜிந்து, நர்வானா மற்றும் சபிதேன் என மூன்று வருவாய் உட்கோட்டங்களும், 1. ஜிந்து 2. ஜுலானா 3. நர்வானா 4. சபிதோன் என நான்கு வருவாய் வட்டங்களையும் கொண்டது.

அரசியல்

[தொகு]

இம்மாவட்டம் ஜிந்து, ஜுலானா, சபிதேன், உச்சனா கலான் மற்றும் நர்வானா என ஐந்து சட்டமன்ற தொகுதிகளையும், இம்மாவட்டத்தின் பகுதிகள் ஹிசார், சோனிபட் மற்றும் சிர்சா நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் உள்ளது.[1]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஜிந்து மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,334,152 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.10% மக்களும், நகரப்புறங்களில் 22.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.13% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 713,006 ஆண்களும் மற்றும் 621,146 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 871 வீதம் உள்ளனர். 2,702 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 494 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 71.44 ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.81 ஆகவும், பெண்களின் படிப்பறிவு 60.76 ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 168,554 ஆக உள்ளது. [2]

சமயம்

[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,276,669 (95.69 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 23,016 (1.73 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 889 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 2,594 (0.19 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 172 (0.01 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 29,103 ஆகவும் (2.18 %) பிற சமயத்து மக்கள் தொகை 56 (0.00 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,653 (0.12 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.

பொருளாதாரம்

[தொகு]

வேளாண்மைத் தொழிலே இம்மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 151, 157. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-03-16.
  2. Jind District : Census 2011 data

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிந்து_மாவட்டம்&oldid=3573149" இலிருந்து மீள்விக்கப்பட்டது