பிவானி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிவானி மாவட்டம், இந்திய மாநிலமான அரியானாவின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் பிவானியில் உள்ளது.

இந்த மாவட்டம் 1972 ஆம் ஆண்டு திசம்பர் 22 அன்று உருவாக்கப்பட்டது. சார்க்கி தாத்ரி தனி மாவட்டமாக உருவாகும் வரை இந்த மாவட்டம் 5,140 சதுர கிலோமீற்றர் (1,980 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருந்ததுடன் மாநிலத்தின் பெரிய மாவட்டமாக காணப்பட்டது. இம் மாவட்டம் 442 கிராமங்களை நிர்வகிக்கின்றது. இங்கு 1,634,445 மக்கள் வசிக்கின்றனர். சிர்சா மாவட்டம் தற்போது மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாகும்.

மாவட்ட தலைமையகம் பிவானி நகரம் ஆகும். பிவானி நகரம் தேசிய தலைநகரான டெல்லியில் இருந்து 124 கிலோமீற்றர் (77 மைல்) தொலைவில் உள்ளது. சிவானி , லோஹாரு , தோஷம் , பவானி கெரா , கோஹ்லவாஸ் , லாம்பா என்பன மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்களாகும்.[2]

2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, பரிதாபாத் மற்றும் ஹிசாருக்கு அடுத்தபடியாக இது ஹரியானாவின் மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டமாகும்.[3]

வரலாறு[தொகு]

சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முந்தைய சுரங்கங்கள், வீடுகள் என்பன தோசம் மலைத்தொடரின் கானக் மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[4] பிவானியில் உள்ள மிததால் கிராமத்தில் நடைப்பெற்ற அகழ்வாராய்ச்சிகளில் (1968–73 மற்றும் 1980-86) இப்பகுதியில் அரப்பாவிற்கு முந்தைய மற்றும் அரப்பா கலாச்சாரத்தின் சான்றுகளைக் கண்டறிந்துள்ளன. 2001 ஆம் ஆண்டில் பிவானி நகரிலிருந்து கிழக்கே சுமார் 10 கிலோமீற்றர் (6.2 மைல்) தொலைவில் உள்ள நவ்ரங்காபாத் கிராமத்திற்கு அருகில் தொல்லியல் ஆராய்ச்சிகளில் நாணயங்கள், கருவிகள், சல்லடைகள், பொம்மைகள், சிலைகள் மற்றும் 2,500 ஆண்டுகள் பழமையான பானைகள் உள்ளிட்ட கலைப்பொருட்களை வெளிப்பட்டன. தொல்பொருள் ஆய்வாளர்கள் குஷான், குப்தா மற்றும் யூதேயா ஆகிய காலங்களில் இங்கு நகரம் அமைந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

பிவானி நகரம் அயினி அக்பரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதி முகலாயர்களின் காலத்திலிருந்து ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்து வருகிறது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி பிவானி மாவட்டத்தின் 1,634,445 மக்கள் வசிக்கின்றனர்.[3] இந்த சனத்தொகை கினியா- பிசாவ் தேசத்திற்கு  அல்லது அமெரிக்க மாநிலமான இடாஹோவுக்கு சமமானதாகும்.[5][6] இந்தியாவின் 640 மாவட்டங்களில் 306 வது இடத்தைப் பெறுகிறது. மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு (880 / சதுர மைல்) 341 என்ற மக்கள் அடர்த்தி உள்ளது.  2001–2011 காலப்பகுதியில் சனத் தொகை வளர்ச்சி விகிதம் 14.32% ஆகும். பிவானி மாவட்டத்தில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 884 பெண்கள் என்ற பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதம் 76.7% ஆகும்.[3]

2011 ஆம் ஆண்டு இந்திய சனத் தொகை கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் 99.32% மக்கள் இந்தி மொழியையும், 0.52% பஞ்சாபி மொழியையும் தங்கள் முதன்மை மொழியாகப் பேசினார்கள்.[7]

அரசியல்[தொகு]

பிவானி , லோஹாரு , சிவானி மற்றும் தோஷம் ஆகிய நான்கு துணைப்பிரிவுகளை இந்த மாவட்டம் கொண்டுள்ளது. இந்த துணைப்பிரிவுகள் மேலும் ஐந்து தெஹ்ஸில்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பிவானி மாவட்டத்தின் துணைப்பிரிவுகளான பத்ரா, சர்கி தாத்ரி மற்றும் துணை தெஹ்ஸிலான பாண்ட் கலன் என்பன 2016 ஆம் ஆண்டில் புதிய சார்க்கி தாத்ரி மாவட்டத்தின் பகுதியாகளாக மாற்றப்பட்டன.[8]

இந்த மாவட்டம் லோஹாரூ, பாத்ரா, தாத்ரி, பிவானி, தோசாம், பவானி கேடா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தலா ஒருவர் என்ற முறையில் மாநில சட்டமன்றத்துக்காக ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுகின்றனர். இந்த மாவட்டத்தின் பெரும்பகுதி பிவானி - மகேந்திரகட் மக்களவைத் தொகுதிக்கும், சிற்குபகுதி ஹிசார் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 28°47′00″N 76°08′00″E / 28.7833°N 76.1333°E / 28.7833; 76.1333

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிவானி_மாவட்டம்&oldid=3250095" இருந்து மீள்விக்கப்பட்டது