அயினி அக்பரி
Jump to navigation
Jump to search
அயினி அக்பரி என்பது மொகலாயர்களின் ஆட்சிமுறை பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள பயன்படும் நூல்.[1] இது பாரசீக மொழியில் அபுல் பைசல் என்பவரால் எழுதப்பட்டது. பிற்காலத்தில் இந்நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல நிர்வாக வழிகாட்டி நூல்கள் தோன்றலாயின. அயினி அக்பரி பெயருக்கேற்றபடி, அக்பரின் ஆட்சிக்காலத்திலிருந்த எல்லாத் துறைகளையும் பற்றிய முழுமையான விளக்கங்களைத் தருகிறது. இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. இது அக்பரின் பண்புகளையும், அன்றாட பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கிறது. அக்பரின் அரண்மனைப் பகுதிகள், குதிரைக் கொட்டில், ஆடை அணிகள், படைக்கலங்கள், வேட்டையாடும் குழு, அக்பர் பயணத்தின் போது பாசறை அமைக்கும் முறை முதலியவை பற்றிய விளக்கங்கள் இந்நூலில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அரசு நிர்வாகம் வளர்ந்த கதை". 5 ஆகத்து 2016 அன்று பார்க்கப்பட்டது.