உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சகுலா மாவட்டம்

ஆள்கூறுகள்: 30°41′24″N 76°51′36″E / 30.69000°N 76.86000°E / 30.69000; 76.86000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஞ்சகுல மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பஞ்சகுலா மாவட்டம்
पंचकुला़ जिला
ਪੰਚਕੁਲਾ ਜ਼ਿਲ੍ਹਾ
பஞ்சகுலாமாவட்டத்தின் இடஅமைவு அரியானா
மாநிலம்அரியானா, இந்தியா
தலைமையகம்பஞ்சகுலா
பரப்பு898 km2 (347 sq mi)
மக்கட்தொகை561293 (2011)
மக்கள்தொகை அடர்த்தி625/km2 (1,620/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை55.81%
படிப்பறிவு81.88
பாலின விகிதம்873
வட்டங்கள்2
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பஞ்சகுலா மாவட்டம் (Panchkula district) (இந்தி:पंचकुला़ जिला): வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பஞ்சகுலா நகரம் ஆகும். புகழ் பெற்ற பிஞ்சூர் தோட்டம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் பஞ்சகுலா மற்றும் கல்கா என இரண்டு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. மேலும் கல்கா, பஞ்சகுலா, ராய்ப்பூர் ராணி, பஞ்சகுலா மற்றும் பர்வாலா என ஐந்து நகரங்களை கொண்டது. பஞ்சகுலா நகரத்திற்கு வெளியே சண்டிமந்திர் பகுதியில் இராணுவப் பாசறை உள்ளது.

அமைவிடம்

[தொகு]

அரியானா மாநிலத்தின் வடமேற்கே அமைந்துள்ள பஞ்சகுலா மாவட்டத்தின் கிழக்கே இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டம், தெற்கே அம்பாலா மாவட்டம், தென்மேற்கே பஞ்சாபின் மொகாலி மாவட்டம், மேற்கே சண்டிகர், வடமேற்கே மொகாலி மாவட்டம், எல்லைகளாக அமைந்துள்ளன.

அரசியல்

[தொகு]

இம்மாவட்டத்தில் பஞ்சகுலா மற்றும் கல்கா என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. இம்மாவட்டம் அம்பாலா நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது.

பொருளாதாரம்

[தொகு]

வேளாண் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட இம்மாவட்டத்தில் கோதுமை, பார்லி, கரும்பு மற்றும் அரிசி இம்மாவட்டத்தின் முக்கிய வேளாண்மைப் பயிர்களாகும்.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 561,293 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 44.19% மக்களும்; நகரப்புறங்களில் 55.81% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.83% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 299,679 ஆண்களும் மற்றும் 261,614 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 873 பெண்கள் வீதம் உள்ளனர். 898 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 625 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 81.88% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.04% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.99% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 66,302 ஆக உள்ளது. [1]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 490,702 (87.42%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 40,951 (7.30%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 23,451 (4.18 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,583 (0.46%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,626 (0.29%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 1,008 (0.18%) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 90 (0.02 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 882 (0.16%) ஆகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சகுலா_மாவட்டம்&oldid=3359958" இலிருந்து மீள்விக்கப்பட்டது