உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தான்பூர் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான்பூர் தேசியப் பூங்கா

சுல்தான்பூர் தேசியப் பூங்கா (Sultanpur National Park) இந்தியாவின் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது முன்னர் சுல்தான்பூர் பறவைகள் காப்பகமாக இருந்தது. பின்னர் 1991 ஆம் ஆண்டு இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இது குர்காவுன் நகரிலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 250 வகையான பறவைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 100 புலம்பெயர் பறவைகளும் இங்கு வருகின்றன. இப்பூங்காவின் வருடாந்திர வெப்பநிலை 0° முதல் 46° வரை அதிகரிக்கிறது. இதன் பரப்பளவு 1.43 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

அறிமுகம்

[தொகு]

இது முன்னர் சுல்தான்பூர் பறவைகள் காப்பகமாக இருந்தது. பின்னர் 1991 ஆம் ஆண்டு இது தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் மிகவும் பிரபலமான தேசிய பூங்காவாகும். ஹரியானா மாநிலத்தில் குருகிராம் மாவட்டம், ஃபாரூக்நகர், சுல்தான்பூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. டெல்லியில் உள்ள தௌலா கானிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், குருகிராம் - ஜாஜர் நெடுஞ்சாலையில் குர்காவுன் நகரிலிருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவிலும் சுல்தான்பூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 250 வகையான பறவைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் குளிர்காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான புலம்பெயர் பறவைகளும் இங்கு வருகின்றன. இப்பூங்காவின் வருடாந்திர வெப்பநிலை 0° முதல் 46° வரை அதிகரிக்கிறது. இதன் பரப்பளவு 1.43 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

ஹரியானா அரசு சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தில் மேடுகளை அமைத்தல், பாதைகளை அகலப்படுத்துதல், குழாய் கிணறுகள் தோண்டுவது போன்ற பல மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. கருவேலம், வேம்பு போன்ற அதிகமான மரங்களை நடவு செய்வதன் மூலம் இப்பகுதியில் தாவரங்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகில் மொத்தம் 10,000905630 வகையான பறவைகளின் பட்டியலில் இருந்து சுமார் 9 வகை பறவையினங்கள் பருவகால மாற்றங்களால் இடம் பெயர்வுகளில், கிட்டத்தட்ட 3 இனங்கள் இந்தியாவுக்கு குடிபெயர்கின்றன, இதில் மத்திய ஆசியாவின் வான்வழியைப் பயன்படுத்தும் 175 நீண்ட தூர இடம்பெயர்வு இனங்கள் அடங்கும். மேலும் அமுர் வல்லூறு, மஞ்சள் பாறு, உப்புக்கொத்திகள், வாத்து, ]] பெரிய நாரை, அரிவாள் மூக்கன், பூநாரை, தாமிர இறக்கை இலைக்கோழி, போன்றவைகளும் அடங்கும்.[1][2] இவற்றில் ஏறக்குறைய 10 வகையான பறவைகள் சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தில் காணப்படுகின்றன. அவைகளில் சில இங்கேயே வசிப்பவைகள். மற்றவைகள் சைபீரியா, ஐரோப்பா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற தொலைதூர பகுதிகளிலிருந்து வந்தவைகள் ஆகும். ஒரு சில நெல்வயல் நெட்டைக்காலி, ஊதாத் தேன்சிட்டு, சின்ன நீர்க்காகம், புறா, ஐரோவாசியா நத்தைக் குத்தி, கௌதாரி, மஞ்சள் மூக்கு நாரை,வெண்தொண்டை மீன்கொத்தி, சின்னக் கொக்கு, பெரிய கொக்கு, உண்ணிக்கொக்கு, போன்ற உள்ளூர் பறவைகளும் இதில் அடங்கும்.

ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவை இனங்கள் சுல்தான்பூரில் உணவளிக்கும் இடங்களைத் தேடி குளிர்காலத்தை கடக்கின்றன. குளிர்காலத்தில், இந்த சரணாலயம் சைபீரியக் கொக்கு, பெரும் பூநாரை, பேதை உள்ளான், கிளுவை, பச்சைக்காலி, ஊசிவால் வாத்து, வெள்ளை வாலாட்டிக் குருவி, ஆண்டி வாத்து போன்ற புலம்பெயர்ந்த பறவைகளின் அழகிய பனோரமாவை வழங்குகிறது.

சூழ்நிலை

[தொகு]

பறவை வளர்ப்பு மற்றும் பறவை பார்வையாளர்களுக்கு ஏற்றவகையில் இந்தப் பறவைகள் சரணாலயத்தில் ஈரநிலங்கள், அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த பறவைகள் இங்கு வரும்போது சிறந்த முறையில் பார்வையிடப்படுகிறது. சுல்தான்பூரில் கடுமையான வட இந்திய கோடைகாலத்தின் 0° முதல் 46° வரையிலான காலநிலை உள்ளது. குளிர்காலத்தில் 9° முதல் 0° வரையிலான கால நிலையைக் கொண்டுள்ளது. ஜூலை முதல் ஆகஸ்ட் இறுதி வரை மழைக்காலம் குறைவாகவே உள்ளது.

சுல்தான்பூர் தேசியப் பூங்கா.

பறவைகள் சரணாலயம் நிறுவுதல்

[தொகு]

ஒரு பறவைகள் சரணாலயமாக இது பிரபலமான ஆங்கிலேய உயிரியலாளரும் புகழ்ப்பெற்ற பறவையியலாளரும், தில்லி பறவைக் கண்காணிப்பு சங்கத்தின் கௌரவச் செயலாளாருமான பீட்டர் ஜாக்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியப் பிரதமர், இந்திராகாந்திக்கு பறவைகள் சரணாலயமான தில்லி அருகேயுள்ள சுல்தான்பூர் ஜீல் என்ற இடத்தில் ஒரு சரணாலயத்தை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து 1970 ஆம் ஆண்டில் எழுதினார். இந்திரா காந்தியும் அவரிடம் பறைவகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

புகைப்படங்கள்

[தொகு]

இந்தத் தேசியப் பூங்காவின் புகைப்படங்கள் கீழே,

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. Sekercioglu, C.H. (2007). "Conservation ecology: area trumps mobility in fragment bird extinctions". Current Biology 17 (8): 283–286. doi:10.1016/j.cub.2007.02.019. பப்மெட்:17437705. 
  2. "Pallid harrier spotted in Asola Bhatti Sanctuary as migratory birds arrive in Delhi.", ஹிந்துஸ்தான் டைம்ஸ், 27 Nov 2017.