பூபேந்தர் சிங் ஹூடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூபேந்தர் சிங் ஹூடா
Bhupinder Singh Hooda in WEF, 2010.jpg
அரியானா முதலமைச்சர்
தொகுதி கர்ஹி சம்ப்லா கிலோயி
பதவியில்
5 மார்ச்சு 2005 – 26 அக்டோபர் 2014
முன்னவர் ஓம் பிரகாச் சௌதாலா
தனிநபர் தகவல்
பிறப்பு 15 செப்டம்பர் 1947 (1947-09-15) (அகவை 75)
சங்கி கிராமம், ரோதக் மாவட்டம், அரியானா இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) ஆஷா ஹூடா
பிள்ளைகள் மகன் தீபேந்தர் சிங் நாடாளுமன்ற உறுப்பினர், ஓர் மகள்.
பணி அரசியல்வாதி

பூபேந்தர் சிங் ஹூடா (Bhupinder Singh Hooda, இந்தி: भूपिंदर सिंह हुड्डा, பிறப்பு: செப்டம்பர் 15, 1947) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் தலைவரும் முன்னாள் அரியானா மாநில முதலமைச்சரும் ஆவார்[1]. முதல்முறையாக அரியானா முதல்வராக மார்ச்சு 2005இல் பதவி யேற்றார். 2009ஆம் ஆண்டு நடந்த மாநிலச் சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு இரண்டாம் முறையாக அக்டோபர் 2009 அன்று முதலவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இளமை[தொகு]

அரியானாவின் ரோதக் மாவட்டத்தில் சங்கி கிராமத்தில் சௌத்திரி ரண்பீர் சிங் குடும்பத்தில் பிறந்தார்.குஞ்ச்புரா சைனிக் பள்ளியில் படித்தார்.[2]. தமது இளங்கலை கலை மற்றும் சட்டப் படிப்புகளை சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் தில்லியின் தில்லி பல்கலைக்கழகத்திலும் படித்தார்.

அரசியல் வாழ்வு[தொகு]

1991,1996,1998 மற்றும் 2004 ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் ரோதக் தொகுதியிலிருந்து வென்று நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.இத்தேர்தல்களில் ஜாட் இனத்தலைவர் தேவிலாலை தொடர்ந்து மூன்று முறை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. 2001 முதல் 2004 வரை அரியானா சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.1996-2001 காலத்தில் அரியானா மாநில காங்கிரசுக் கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.பல விவசாயிப் போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளார்.பஞ்சாப் மற்றும் அரியானா வக்கீல்கள் சங்கத்தின் (பார் கௌன்சில்) உறுப்பினருமாவார்.

விமரிசனங்கள்[தொகு]

பூபேந்தர் தமது தொகுதிகளான ரோதக் மற்றும் சோனேபெட் மாவட்டங்களின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார், தென் அரியானா மற்றும் வட அரியானா பகுதிகளை புறக்கணிக்கிறார் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன[3][4][5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-10-07 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2009-10-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.pib.nic.in/release/release.asp?relid=35950 Public Information Bureau release on Kunjpara Sainik School
  3. http://www.thefreelibrary.com/Hooda+refutes+allegation+of+being+biased+about+development.-a0221794264[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://www.tribuneindia.com/2010/20100306/haryana.htm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-03-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-05 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபேந்தர்_சிங்_ஹூடா&oldid=3629102" இருந்து மீள்விக்கப்பட்டது