வே. நாராயணசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வி. நாராயணசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வே. நாராயணசாமி
V. Narayanasamy with Ambassador Kenneth I. Juster (cropped).jpg
புதுச்சேரியின் 10வது முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 சூன் 2016
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
முன்னவர் ந. ரங்கசாமி
தொகுதி நெல்லிதோப்பு
இந்தியப் பிரதமரின் அலுவலகம்
பதவியில்
2009–2014
பிரதமர் மன்மோகன் சிங்
பின்வந்தவர் ஜிதேந்திர சிங்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009–2014
முன்னவர் எம். ராமதாஸ்
பின்வந்தவர் ஆர். இராதாகிருஷ்ணன்
தொகுதி புதுச்சேரி
தனிநபர் தகவல்
பிறப்பு வேலு நாராயணசாமி
மே 30, 1947 (1947-05-30) (அகவை 73)
பாண்டிச்சேரி, புதுச்சேரி
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர் வேலு
ஈசுவரி
இருப்பிடம் புதுச்சேரி, இந்தியா
சமயம் இந்து

வேலு நாராயணசாமி (பிறப்பு: 30 மே 1947) என்பவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[1][2] இவர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வே. நாராயணசாமி பாண்டிச்சேரியில் வேலு மற்றும் ஈசுவரி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டமும் பயின்று பட்டம் பெற்றார்.

அரசியலில்[தொகு]

வே. நாராயணசாமி மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 இல் புதுச்சேரி தொகுதி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங்கின் இரண்டாவது அமைச்சரவையில் இணை அமைச்சராகவும், முதலாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற அலுவல்கள் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

2014 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சியின் ஆர். இராதாகிருஷ்ணனிடம் தோல்வியுற்றார்.[3]

2016 மே மாதத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு-திமுக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சராக நாராயணசாமி பதவியேற்றுக் கொண்டார்.[4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._நாராயணசாமி&oldid=2992181" இருந்து மீள்விக்கப்பட்டது