வெ. வைத்தியலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வி. வைத்தியலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெ. வைத்தியலிங்கம்
11-ஆம் புதுச்சேரி முதல்வர்
பதவியில்
செப்டம்பர் 4, 2008 – மே 15, 2011
முன்னவர் ந. ரங்கசாமி
பின்வந்தவர் ந. ரங்கசாமி
தொகுதி நெட்டப்பாக்கம்
பதவியில்
4 சூலை 1991 – 13 மே 1996
முன்னவர் எம். டி. ஆர். இராமச்சந்திரன்
பின்வந்தவர் ஆர். வி. ஜானகிராமன்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 5, 1950 (1950-10-05) (அகவை 73)
கடலூர், தமிழ்நாடு
அரசியல் கட்சி காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சசிகலா
பிள்ளைகள் 1 மகன், 1 மகள்
இருப்பிடம் புதுவை

வெ. வைத்தியலிங்கம் (பிறப்பு: அக்டோபர் 5, 1950), இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் அரசியல்வாதியும் முன்னாள் முதல் அமைச்சரும் ஆவார். முதன்முறையாக 1991 முதல் 1996 வரையும் பின்னர் இரண்டாம் முறையாக 2008 -2011 காலகட்டத்திலும் முதலமைச்சராகப் பணியாற்றினார். ஆறுமுறை சட்டப்பேரவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூத்த பேரவை உறுப்பினராக விளங்குகிறார்.

இவர் புதுவையின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற வெங்கடசுப்பா ரெட்டியாரின் மகனாவார்.

இளமை வாழ்வு[தொகு]

பாண்டிச்சேரியில் பிறந்து மதுக்கரை, புதுச்சேரியில் வளர்ந்த வைத்தியலிங்கம், சென்னை இலயோலாக் கல்லூரியில் பயின்று பின்னர் தமது குடும்ப விவசாயத்திற்கு திரும்பினார். 1969 ஆம் ஆண்டு புதுவை மருத்துவ சேவை இயக்குனராக இருந்த டா.சாம்பசிவத்தின் மகள் சசிகலாவை மணம் புரிந்தார். புதுவை மாநில நில வளர்ச்சி வங்கியின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

அரசியல் பதவிகள்
முன்னர்
டி.ஆர். ராமச்சந்திரன்
புதுவை முதல் அமைச்சர்
4 சூலை 1991–13 மே 1996
பின்னர்
ஆர்.வி. ஜானகிராமன்
முன்னர்
வி.எம்.சி. கணபதி
பேரவை எதிர்கட்சித் தலைவர்
26 மே 1996–21 மார்ச் 2000
பின்னர்
ஆர்.வி. ஜானகிராமன்
முன்னர்
என். ரங்கசாமி
புதுவை முதல் அமைச்சர்
4 செப்டம்பர் 2008–நடப்பு
பின்னர்
என். ரங்கசாமி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._வைத்தியலிங்கம்&oldid=3823710" இருந்து மீள்விக்கப்பட்டது