நமது அம்மா (அதிமுக நாளிதழ்)
நமது அம்மா, அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளான 24 பிப்ரவரி 2018 அன்று நாளிதழாக சென்னையில் துவக்கப்பட்டது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழாக செயல்படும் நமது அம்மா நாளிதழ், குறைந்த பட்சம் 12 பக்கங்கள் கொண்டிருக்கும். நமது அம்மா நாளிதழின் தலைமை ஆசிரியர் மருது அழகுராஜ் ஆவார்.[1]
பின்னணி[தொகு]
ஜெ. ஜெயலலிதா, அதிமுகவின் அதிகாரப்பூர்வ அச்சு ஊடகமாக நமது எம் ஜி ஆர் எனும் நாளிதழையும், காட்சி ஊடகமாக ஜெயா தொலைக்காட்சியையும் துவக்கினார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், வி. கே. சசிகலாவின் குடும்பத்தின் பிடியில் இருந்த நமது எம்ஜிஆர் நாளிதழையும், ஜெயா டி வியையும் டி. டி. வி. தினகரன் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அதனால் அதிமுக அரசின் செய்திகள் இந்நாளிதழிலும், தொலைக்காட்சியிலும் மறைக்கப்பட்டது.
எனவே அதிமுக அரசு மற்றும் கட்சியின் செய்திகள் வெளியிடுவதற்கும் நமது அம்மா எனும் பெயரில் புதிய நாளிதழ் 24 பிப்ரவரி 2018 அன்று துவக்கப்பட்டது.[2]