நமது எம் ஜி ஆர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நமது எம் ஜி ஆர் என்பது ஜெ. ஜெயலலிதாவால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ அச்சு ஊடகமாக 1988 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நாளிதழ் ஆகும். 1999 இல் காட்சி ஊடகமாக ஜெயா தொலைக்காட்சியை அவர் துவக்கினார். அவரின் மறைவிற்குப் பின்னர், வி. கே. சசிகலாவின் குடும்பத்தின் பிடியில் இருந்த நமது எம்ஜிஆர் நாளிதழையும், ஜெயா தொலைக்காட்சியையும் டி. டி. வி. தினகரன் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். தற்போது இந்த நாளிதழ் அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக செயல்படுகிறது. இதனை அடுத்து அதிமுக அரசு மற்றும் கட்சியின் செய்திகளை வெளியிடுவதற்கும் நமது அம்மா எனும் பெயரில் புதிய நாளிதழும், நியூஸ் ஜெ தொலைக்காட்சியும் துவக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமது_எம்_ஜி_ஆர்&oldid=3378067" இருந்து மீள்விக்கப்பட்டது