உள்ளடக்கத்துக்குச் செல்

ச. கல்யாணசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச. கல்யாணசுந்தரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோயம்புத்தூர்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2020 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
நாம் தமிழர் கட்சி (2010 - 2020)
வாழிடம்(s)தமிழ்நாடு,  இந்தியா
வேலைபேராசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி

கல்யாணசுந்தரம் (Shanmugam Kalyanasundaram) தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த பேராசிரியரும் அரசியல்வாதியும் ஆவார். 6 ஆகத்து 2022 முதல், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா செய்தித்தாளின் தலைமை ஆசிரியராக உள்ளார்.[1] 2010-இல் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி துவங்கியதிலிருந்து 2020 வரை அக்கட்சியின் மேடைப் பேச்சாளராகவும், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர்.[2] இவர் 2016 சட்டமன்றத் தேர்தலிலும்,[3] 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளராவார்.[4][5] இவர் பயணி என்ற வலையொளியில் அரசியல் குறித்து பேசிவருபவர் ஆவார். பின்பு 2020 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தார்.[6][7] இவர் மேதகு திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

தேர்தலில் பெற்ற வாக்குகள்

[தொகு]
ஆண்டு தேர்தல் கட்சி தொகுதி முடிவுகள் பெற்ற வாக்குகள் வாக்கு %
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 நாம் தமிழர் கட்சி  சிங்காநல்லூர் 5 ஆவது இடம் 4354 2.4[8]
2019 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019 நாம் தமிழர் கட்சி  கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி 4 வது இடம் 60,519 4.84[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் புதிய ஆசிரியராக வேலுமணியின் தீவிர ஆதரவாளர் நியமனம்..!". Asianet News tamil. 6 August 2022. பார்க்கப்பட்ட நாள் 6 August 2022.
  2. Team, SimpliCity News (2020-12-21). "Wanted to join a party working for the welfare of people - Kalyanasundaram joins AIADMK after quitting NTK". simplicity.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
  3. "IndiaVotes AC: All Candidates of Naam Tamilar Katchi for 2016". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.
  4. "Naam Tamilar Katchi (NTK) Candidate List 2019 for Tamil Nadu Lok Sabha Election". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-28.
  5. "நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகிய முக்கிய நிர்வாகிகள்.! அதிர்ச்சியில் சீமான்.!!". Seithipunal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  6. "அதிமுகவில் இணைய காரணம் என்ன? - கல்யாண சுந்தரம் பிரத்யேக பேட்டி". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  7. "அதிமுகவுக்கு மேலும் ஒரு செய்தித்தொடர்பாளர் நியமனம்!". www.toptamilnews.com. 2021-01-19. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  8. "IndiaVotes AC: All Candidates of Naam Tamilar Katchi for 2016". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  9. "நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._கல்யாணசுந்தரம்&oldid=3943548" இலிருந்து மீள்விக்கப்பட்டது