தைனிக் பாஸ்கர்
தைனிக் பாஸ்கர் (ஆங்கிலம்: Dainik Bhaskar) ( இந்தி: दैनिक भास्कर ) என்பது இந்தியாவில் விற்பனையாகும் முதன்மை இந்தி மொழி நாளேடுகளில் ஒன்று ஆகும்.[1] இது குஜராத்தில் அதிகம் வெளியாகும் நாளேடாகவும் அதிகப் பதிப்புகளைக் கொண்ட நாளேடாகவும் விளங்குகிறது. இது அகமதாபாத், பரோடா, சூரத், ஜம்நகர், ராஜ்காட், பூஜ், மெசானா, பாவ்நகர் ஆகிய நகரங்களில் அச்சடிக்கப்பட்டு வெளியாகிறது.
இது இந்தியாவின் மிகப்பெரிய அச்சு ஊடக நிறுவனமான தைனிக் பாஸ்கர் குழுமத்திற்கு (டி.பி. கார்ப் லிமிடெட்) சொந்தமானது. 1958 இல் போபாலில் தொடங்கப்பட்ட இது 1983 ஆம் ஆண்டில் தைனிக் பாஸ்கரின் இந்தூர் பதிப்பை அறிமுகப்படுத்தியது. இன்று, டைனிக் பாஸ்கர் குழு 14 மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் 63 பதிப்புகளுடன் உள்ளது
வரலாறு
[தொகு]இந்தி மொழி நாளிதழின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1948 ஆம் ஆண்டில் தைனிக் பாஸ்கர் தொடங்கப்பட்டது. இது குவாலியரில் சுப சவேர் என்ற பெயரிலும் மற்றும் [[குட் மார்னிங் இந்தியா எனற பெயரில் போபாலிலும் தொடங்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டில், இந்த பத்திரிக்கைக்கு 'பாஸ்கர் சமச்சார்' என்று பெயர் மாற்றப்பட்டது. 1958 ஆம் ஆண்டில், இது தைனிக் பாஸ்கர் என மறுபெயரிடப்பட்டது. பாஸ்கர் என்ற வார்த்தையின் அர்த்தம் ஆங்கிலத்தில் "தி ரைசிங் சன்". அதன் உதிக்கும் சூரியனின் வரைபடத்துடன் வெளிவந்தது.( பிரகாசமான எதிர்காலத்தை குறிக்கும் சொல்லாகும்)..[சான்று தேவை]
விரிவாக்கம்
[தொகு]1995 வாக்கில், டைனிக் பாஸ்கர் மத்தியப் பிரதேசத்தில் அதிகம் விற்பனையாகும் செய்தித்தாளாக உருவெடுத்தது.[2] மற்றும் வாசகர்கள் கணக்கெடுப்பு மூலம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் தினசரி என அறிவிக்கப்பட்டது. செய்தித்தாள் மத்தியப் பிரதேசத்திற்கு வெளியே விரிவாக்க முடிவு செய்து, ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான செய்ப்பூர் நகரம் அதிக விற்பனைத் திறன் கொண்ட சந்தையாக .அடையாளம் காணப்பட்டது.
1996 ஆம் ஆண்டில், செய்ப்பூரில் அதன் முதல் நாளில் 50,000 பிரதிகள் கொண்ட இரண்டாவது செய்தித்தாளாக (புழக்கத்தின் அடிப்படையில்) நுழைவதே தைனிக் பாஸ்கரின் குறிக்கோளாக இருந்தது. இந்த இலக்கை அடைய, 700 கணக்கெடுப்பாளர்கள் அடங்கிய குழு ஜெய்ப்பூரில் செய்தித்தாள் வாங்கி கொண்டிருக்கும் சாத்தியமான 200,000 வீடுகளை ஆய்வு செய்தது. கணக்கெடுப்பு பின்னூட்டத்தின் அடிப்படையில், அவர்கள் செய்தித்தாளின் முன்மாதிரியைக் காண்பிப்பதற்காக கணக்கெடுக்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளுக்கும் திரும்பிச் சென்று முன்கூட்டியே சந்தா செலுத்துவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினர். வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 1.50 சந்தா விலை (நியூஸ்ஸ்டாண்ட் விலையுடன் ஒப்பிடும்போது ரூபாய் 2 தள்ளுபடி) மற்றும் அதிருப்தி ஏற்பட்டால் பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகிய உறுதிகள் வழங்கப்பட்டன. 1996 டிசம்பர் 19 அன்று ஜெய்ப்பூரில் தைனிக் பாஸ்கர் தொடங்கப்பட்டபோது, 172,347 பிரதிகள் விற்று முதலிடத்தை பெற்ற செய்தித்தாள் ஆனது.
அமர் உஜாலா , என்ற பெயரில் இந்தி மொழியில் வெளிவந்து இந்தியாவில் விநியோகிக்கப்படும் தினசரி செய்தித்தாள் ஆகும். இது நாளொன்றுக்கு சுமார் இரண்டு மில்லியன் பிரதிகளை விற்பனை இலக்கைக் கொண்டது. இது ஏழு மாநிலங்களில் 19 பதிப்புகள் மற்றும் 167 பிராந்தியங்களை உள்ளடக்கிய ஒரு யூனியன் டொமைனைக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் பத்ரிகா , என்ற செய்தித்தாள் அதற்கு முன்னர் அந்த நேரத்தில் சுமார் 100,000 பிரதிகள் புழக்கத்தில் இருந்தது.[2] ஜோத்பூர், பிகானீர், கோட்டா, உதய்பூர் மற்றும் அஜ்மீர் சிகார் உள்ளிட்ட ராஜஸ்தானின் பிற நகரங்களிலும் இதேபோன்ற மாதிரியை 'தைனிக் பாஸ்கர்' வெற்றிகரமாக முன்னெடுத்தது. 1999 க்குள் முழு மாநிலத்தின் நகர செய்தித்தாள்களில் முதலிடத்தை அடைந்தது.
இதன் அடுத்த இலக்கு சண்டிகர் ஆகும். இது ஜனவரி 2000 இல் 220,000 வீடுகளை உள்ளடக்கிய வாடிக்கையாளர் கணக்கெடுப்பைத் தொடங்கியது. அந்த நேரத்தில், சண்டிகரில் உள்ள ஆங்கில மொழி செய்தித்தாள்கள் இந்தி செய்தித்தாள்களை விட ஆறு மடங்கு அதிகம் விற்றன, தி டிரிப்யூன் என்ற ஆங்கில செய்தித்தாள் சுமார் 50,000 பிரதிளை விற்று வந்தது. தைனிக் பாஸ்கரின் கணக்கெடுப்புக் குழு, சண்டிகரில் வசிப்பவர்கள் தரமான உணர்வுகள் காரணமாக ஆங்கில செய்தித்தாள்களை விரும்புகிறார்கள் என்று பரிந்துரைத்தது. இதன் விளைவாக, உள்ளூர் சண்டிகர் பேச்சுவழக்கை செய்தித்தாள் வடிவமைப்பில் இணைத்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தை கலந்தது. தைனிக் பாஸ்கர் 2000 ஆம் ஆண்டு மே மாதம் சண்டிகரில் 69,000 பிரதிகள் விற்று நகரத்தில் முதலிடத்தைப் பிடித்தது.[2]
இணைப்புகள்
[தொகு]- தளம் (இந்தியில்)
- ↑ Audit Bureau of Circulations
- ↑ 2.0 2.1 2.2 Porus Munshi (2009). "Dainik Bhaskar: No. 1 From Day One". Making Breakthrough Innovations Happen. Collins Business. pp. 16–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7223-774-5.