பிரஜா வாணி
Jump to navigation
Jump to search
வகை | நாளேடு |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
நிறுவுனர்(கள்) | கே. என். குருசாமி |
தலைமையகம் | மகாத்மா காந்தி ரோடு, பெங்களூர், கர்நாடகம் |
விற்பனை | 530,000 (2012 ஆண்டுக் கணக்கின்படி) official website = http://www.prajavani.net/ |
பிரஜாவாணி என்பது கர்நாடகாவில் வெளியாகும் நாளேடுகளில் ஒன்று. பிரஜாவாணி என்றால் மக்கள் குரல் என்று பொருள். நாள்தோறும் 5,30,000 பிரதிகளை வெளியிட்டு, முதன்மையான கன்னட நாளிதழ்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
கர்நாடகாவின் தென்பகுதிகளில் அதிக வாசகர்களைக் கொண்டுள்ளது. நாடளவிலும், பன்னாட்டளவிலும் உள்ள செய்திகளும் வெளியாகின்றன. கதைகள், பாடல்கள், குழந்தைகள் பக்கம் என வெவ்வேறு பகுதிகளைக் கொண்டுள்ளது. கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு நாளும் சிறப்பிதழும் இணைப்பாக வழங்கப்படுகின்றன.
- திங்கள் - நகர்ப்பகுதி (இருப்பிடம்)
- செவ்வாய் - விளையாட்டு, கல்வி
- புதன் - வியாபாரம், வணிகம்
- வியாழன் - ஆன்மீகம்
- வெள்ளி - திரைப்படங்கள்,
- சனி - உடல்நலம்
மற்ற வெளியீடுகள்[தொகு]
- டெக்கன் ஹெரால்டு, ஆங்கில நாளேடு
- சுதா, கன்னட வார இதழ்
- மயூரா, கன்னட மாத இதழ்