உள்ளடக்கத்துக்குச் செல்

1977 இந்தியப் பொதுத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியப் பொதுத் தேர்தல், 1977 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியப் பொதுத் தேர்தல், 1977

← 1971 மார்ச் 16–20, 1977 [1] 1980 →

மக்களவைக்கான 542 இடங்கள்
பதிவு செய்த வாக்காளர்கள்321,174,327
வாக்களித்தோர்60.49% Increase 5.22pp
  First party Second party Third party
 

தலைவர் மொரார்ஜி தேசாய் இந்திரா காந்தி பி. சுந்தரய்யா
கட்சி ஜனதா கட்சி இந்திரா காங்கிரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
கூட்டணி ஜனதா கட்சி கூட்டணி காங்கிரஸ் கூட்டணி இடதுசாரி கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சூரத் ரே பரேலி
(தோல்வி)
-
வென்ற
தொகுதிகள்
295 154 22
மாற்றம் Increase 209 198 3
விழுக்காடு 41.32 34.52 4.29%


முந்தைய இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

மொரார்ஜி தேசாய்
ஜனதா கட்சி

இந்தியக் குடியரசின் ஆறாம் நாடாளுமன்றத் தேர்தல் 1977 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஆறாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி தோற்கடிக்கப்பட்டு ஜனதா கட்சி வென்று ஆட்சியமைத்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

பின்புலம்

[தொகு]

இத்தேர்தலில் 518 தொகுதிகளில் இருந்து 518 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்களைத் தவிர இரு ஆங்கிலோ-இந்தியர்களும், வடகிழக்கு பிரதேசத்திலிருந்து (தற்கால அருணாசலப் பிரதேசம்) ஒருவரும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். முந்தைய தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற இந்திரா காந்தி அடுத்த ஐந்து வருடங்களில் படிப்படியாகத் தனது செல்வாக்கினை இழந்தார். ரே பரேலி தொகுதியில் இந்திராவிடம் தோற்ற ராஜ் நாராயண் என்ற வேட்பாளர், இந்திரா காந்தி தனது அரசு அதிகாரத்தை தேர்தல் பிரச்சாரத்துக்கு முறைகேடாக பயனபடுத்தினார் என்று அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 1975ல் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்திரா தன் பதவியைத் தக்க வைக்க நாட்டில் நெருக்கடி நிலையினை அறிவிக்கச் செய்தார். பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களின் பல அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் சிறையிலடைக்கப்பட்டனர்; காங்கிரசுக்கு எதிரான மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. நெருக்கடி நிலையினை எதிர்த்து சோசலிசக் கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஒரு பெரும் மக்கள் இயக்கம் உருவானது. 1976ல் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தல் ஒரு ஆண்டுத் தள்ளிப் போனது. தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இந்திராவை எதிர்க்க நிறுவன காங்கிரசு, பாரதீய ஜனசங்கம், பாரதீய லோக்தளம், சோசலிசக் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கின. இந்திரா அரசு மீதான பெரும் மக்கள் அதிருப்தியால் ஜனதா கட்சி பெருவாரியான இடங்களில் வென்றது. இந்திராவும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் தேர்தலில் தோற்றனர். ஜனதா கட்சியின் தலைவர் மொரார்ஜி தேசாய் நாட்டின் முதல் காங்கிரசு கட்சி சாராத பிரதமரானார்.

முடிவுகள்

[தொகு]

மொத்தம் 60.49% வாக்குகள் பதிவாகின.[2]

கூட்டணி கட்சி வென்ற இடங்கள் மாற்றம் வாக்கு %
ஜனதாக் கூட்டணி
இடங்கள்: 345
மாற்றம்: புதிய
வாக்கு % %: 51.89
ஜனதா கட்சி 298 புதிய 43.17
சிபிஎம் 22 -3 4.3
அகாலி தளம் 9 8 1.26
இந்தியக் குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி 5 0.55
புரட்சிகர சோசலிசக் கட்சி 3 2 n/a
பார்வார்டு ப்ளாக் 3 2 0.34
இந்தியக் குடியரசுக் கட்சி (கோப்ரகாடே) 2 1 0.51
திமுக 1 -22 1.76
சுயேட்சைகள் 2
காங்கிரசு கூட்டணி
இடங்கள்: 189
மாற்றம்: -217
வாக்கு  %: 40.98
இந்திரா காங்கிரசு 153 −197 34.52
அதிமுக 19 2.9
சிபிஐ 7 -16 2.82
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 2 0.26
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 2 -2 0.3
கேரள காங்கிரசு 2 -1 0.18
புரட்சிகர சோசலிசக் கட்சி (பிளவு) 1 -1
சுயேட்சைகள் 2
மற்றவர்கள்: 19 மற்றவர்கள் 19

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]