அ. தமிழ் மகன் உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. தமிழ் மகன் உசேன்
அதிமுக அவைத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 சூன் 2022
பொதுச்செயலாளர்எடப்பாடி கே. பழனிசாமி
முன்னையவர்இ. மதுசூதனன்
அதிமுக இடைக்கால அவைத்தலைவர்
பதவியில்
1 திசம்பர் 2021 – 22 சூன் 2022
ஒருங்கிணைப்பாளர்கள்
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்
பதவியில்
10 செப்டம்பர் 2012 – 13 ஏப்ரல் 2016
முன்னையவர்அப்துல் ரகுமான்
பின்னவர்அன்வர் ராஜா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1936 (அகவை 87–88)[1][2]
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
(1972 முதல்)
வேலைஅரசியல்வாதி

அ. தமிழ் மகன் உசேன் (பிறப்பு 1936) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் 23 சூன் 2022 முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் ஆவார்.[1][3] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான இவர், அகில உலக எம். ஜி. ஆர். மன்றச் செயலாளராகவும் பணியாற்றினார். இவர் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[2]

எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் அதிமுகவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான படிவத்தில் கையெழுத்திட்ட 11 கட்சித் தொண்டர்களில் தமிழ் மகன் உசேனும் ஒருவர். 1972ல் கட்சி உருவானதிலிருந்து, உசேன் அதிமுகவில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர் கன்னியாகுமரியின் முதல் அதிமுக மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார்.[1]

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அவர் பாளையம்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், 13 ஏப்ரல் 2016 அன்று தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக ஹைதர் அலி அதிமுக அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[4][5]

திசம்பர் 1, 2021 அன்று, அவர் கட்சியின் இடைக்கால அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.[6][2]இதனைத் தொடர்ந்து, 23 சூன் 2022 அன்று, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மாளிகையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் மகன் உசேன் அதிமுக கட்சியின் அவைத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Who Is Tamil Magan Hussain? One Of AIADMK Founding Members Who Is Now Party Presidium Chairman" (in en-IN). abplive. 2022-06-23. https://news.abplive.com/tamil-nadu/tamil-magan-hussain-profile-aiadmk-presidium-chairman-history-biography-all-you-need-to-know-1538786. 
  2. 2.0 2.1 2.2 "Thamizh Magan Hussain is AIADMK interim presidium chairman". indianexpress. 2021-12-02. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/dec/02/thamizh-magan-hussainis-aiadmk-interim-presidium-chairman-2390714.html. 
  3. "Tamil Magan Hussain: திமுக ஆட்சியில் டிரைவர்... அதிமுக ஆட்சியில் அவைத்தலைவர்: யார் இந்த தமிழ்மகன் உசேன்" (in ta). abplive tamil. 2022-06-23. https://tamil.abplive.com/news/politics/tamil-magan-hussain-profile-aiadmk-presidium-chairman-history-biography-all-you-need-to-know-57797. 
  4. "வக்பு வாரிய தலைவர், உறுப்பினர்கள் விரைவில் தேர்வு" (in ta). hindutamil. 2016-08-31. https://www.hindutamil.in/news/tamilnadu/181741-.html. 
  5. "கட்சியினரிடையே அதிருப்தி அதிகரித்ததால் பாளை. தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்" (in ta). hindutamil. 2016-04-19. https://www.hindutamil.in/news/tamilnadu/77798-.html. 
  6. "அதிமுக புதிய அவைத் தலைவர்: யார் இந்த தமிழ்மகன் உசேன்?" (in ta). indianexpress tamil. 2021-12-01. https://tamil.indianexpress.com/tamilnadu/who-is-tamilmagan-hussain-appointed-aiadmks-interim-presidium-chairperson-377154/. 
  7. "Tamil Magan Hussain Elected AIADMK Presidium Chairman; Question Over Dual Chiefship". ndtv. 2022-06-23. https://www.ndtv.com/india-news/tamil-magan-hussain-elected-as-aiadmk-presidium-chairman-3093045. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._தமிழ்_மகன்_உசேன்&oldid=3789802" இலிருந்து மீள்விக்கப்பட்டது