உள்ளடக்கத்துக்குச் செல்

சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய குடியரசு தலைவர் சரக்கு மற்றும் சேவை வரி(GST)யை ஜீலை 1 2017 அன்று அறிமுகம் செய்கிறார்.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 2017 (நூற்று இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டம்)-ஆக அறிமுகமாகிறது. இந்த ச.சே.வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் இந்தியாநிர்மலா சீதாராமனால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ச.சே.வரி-யின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளானது பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது அவை: 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டிக்கு முந்தைய, பெரும்பாலான பொருட்களுக்கான சட்டப்பூர்வ வரி விகிதம் சுமார் 26.5% ஆக இருந்தது; GSTக்குப் பிறகு, பெரும்பாலான பொருட்கள் 18% வரி வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1][2]

இந்திய அரசினால் நூற்று ஒன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் 1 ஜூலை 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்தது. ஜூலை 1 ஜிஎஸ்டி தினமாக கொண்டாடப்படுகிறது.[3] GST ஆனது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல வரிகளை மாற்றியது.

1 ஜூலை 2017 நள்ளிரவு முதல் துவக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி மற்றும் எதிர்க் கட்சிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வரலாறு

[தொகு]

பின்வரும் வரிகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்பட்டது

[தொகு]
  • பின்வரும் வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக ச.சே.வ திகழுகிறது: [5][6][7][8][9][10][11][12][13][14]


  • பல்வேறு மத்திய மாநில 17 மறைமுக வரிகள் மற்றும் 13 செஸ் கூடுதல் வரிகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது.
மத்தியரசு வரிகள் விகிதம்
1 மத்திய மதிப்பு கூட்டு வரி (CENVAT) அல்லது மத்திய கலால் வரி 12.36%
2 சேவை வரி 15%
3 மத்திய விற்பனை வரி (CST) 2%
4 சிவிடி (CVD) 12,36%
5 சிறப்பு சுங்க கூடுதல் வரி (SAD) 4%
  • 6. கூடுதல் கலால் வரி(மருத்துவ மற்றும் கழிப்பறை தயாரிப்புகள்)
  • 7. கூடுதல் கலால் வரி(சிறப்பு பொருட்கள்
  • 8. கூடுதல் கலால் வரி(ஜவுளி பொருட்கள்)
மாநில அரசு வரிகள் விகிதம்
1 மதிப்பு கூட்டு வரி (VAT) 10 - 14.5%
2 விற்பனை வரி (Central sales tax) 0 - 15%
3 நுழைவு வரி 0 - 12.5%
4 ஆடம்பர வரி (Luxary tax) 3 - 20%
5 பொழுதுபோக்கு வரி (Entertainment tax) (கிராம, நகர சபை வரி தவிர்த்து)[15] 15 - 50%
  • 6. ஆக்ட்ரோய் வரி (சில மாநிலங்கள் மட்டும்)
  • 7. விளம்பர வரி
  • 8. கொள்முதல் வரி (Purchase tax)
  • 9. லாட்டரி, சூதாட்ட வரி
  • 10. மாநில செஸ் மற்றும் சர்சார்ஜ்

சரக்குகள் மற்றும் சேவைகளின் விற்பனை, பரிமாற்றம், கொள்முதல், பண்டமாற்று, குத்தகை, இறக்குமதி போன்ற அனைத்து பரிவர்த்தனைகளிலும் ச.சே.வ விதிக்கப்படும். இந்தியா இரட்டை ஜி.எஸ்.டி மாதிரியைப் பின்பற்றும். இதன் பொருள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜிஎஸ்டி வரியானது நிர்வகிக்கப்படும். ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் மத்திய ஜிஎஸ்டி(ஆங்: Central GST (CGST)) ஒன்றிய அரசாலும், மாநில ஜிஎஸ்டி (ஆங்:State GST (SGST)) மாநில அரசினாலும் விதிக்கப்படும். வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (ஆங்:Integrated GST (IGST)) ஒன்றிய அரசினால் விதிக்கப்படும். GST ஒரு நுகர்வு அடிப்படையிலான வரியாகும், இதனால் சரக்கு மற்றும் சேவைகள் உற்பத்தி செய்யப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படாது மாறாக நுகரப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படும். IGST மாநில அரசுகள் வரி வசூலிப்பதை சிக்கலாக்குகிறது. முந்தைய அமைப்பில் வரி வசூலிப்பது மாநில அரசின் வரையறைக்குட்பட்டிருந்தது.[16]

விளைவுகள் & தாக்கம்

[தொகு]
  • ஜூலை 1, 2017 அன்று வெளியிடப்பட்ட தேசிய அளவிலான ஜிஎஸ்டி வரி, கலால் வரி, சேவை வரி மற்றும் வாட் போன்ற 17 மறைமுக வரிகள் மற்றும் 23 செஸ்களை உள்ளடக்கியது.
  • ஜிஎஸ்டி வரியானது மிகவும் சிக்கலான மறைமுக வரி அமைப்புகளை கணிசமாக எளிதாக்கியுள்ளது, மேலும் முன்பு ஒவ்வொரு மாநிலத்திலும் வணிகம் செய்ய விரும்பும் ஒரு நிறுவனம் 495 வெவ்வேறு சமர்ப்பிப்புகளைச் செய்ய வேண்டியிருந்தது. ஜிஎஸ்டியின் கீழ், அந்த எண்ணிக்கை வெறும் 12 ஆக குறைந்துள்ளது.[17]


  • விலக்கு வரம்புகள்: தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்டது[18]
ஜிஎஸ்டிக்கு முன்பு முன்மொழிவு தற்போதைய
ஜிஎஸ்டிக்கு முந்தைய உற்பத்தி பொருள் ஜிஎஸ்டிக்கு முந்தைய சேவைகள் ஜிஎஸ்டிக்கு முந்தைய சேவைகள் கூட்டு பொருட்கள் & சேவைகள் கூட்டு பொருட்கள் பொருட்கள் கூட்டு வரி சேவைகள் சேவைகள் கூட்டு வரி
மத்திய அரசு 1.5 கோடி; ஏற்றுமதி மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன 10 இலட்சம் பொருந்தாது 25 லட்சம் விதிவிலக்குகள் இல்லாமல் சட்டப்பூர்வ நிறுவன அளவில் திரட்டப்பட்டது முடிவு செய்ய வில்லை; ஆனால் விலக்கு வரம்பிலிருந்து (25 லட்சம்) 1 கோடி வரை கூட்டும் வாய்ப்பு 40 லட்சம் வரையிலான வருடாந்திர வருவாய் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 1.5கோடி வருட வருவாய் கொண்டோர் கூட்டு வரி திட்டத்தினை தேர்வு செய்வதன் மூலம் 1 % வரி செலுத்த வேண்டும் 20 லட்சம் வரையிலான வருடாந்திர வருவாய் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 50 இலட்ச வருட வருவாய் கொண்டோர் கூட்டு வரி திட்டத்தினை தேர்வு செய்வதன் மூலம் 6 % வரி செலுத்த வேண்டும்
மாநில அரசுகள் 5 - 10 இலட்சம் பொருந்தாது சில மாநிலங்களில் சில பொருட்களுக்கு மற்றும் மாறுபட்ட விலைகளில் அனுமதிக்கப்படுகிறது மேலே உள்ளதே மேலே உள்ளதே மேலே உள்ளதே மேலே உள்ளதே மேலே உள்ளதே மேலே உள்ளதே


சரக்கு போக்குவரத்து துறையில் ஜிஎஸ்டி[19]:

  • ஜிஎஸ்டிக்கு முன்பு இந்தியாவில் தளவாட செலவுகள் பெரும் சுமையாக இருந்தது, பொருட்களின் மொத்த மதிப்பினில் சுமார் 14% போக்குவரத்து செலவாக இருந்தது, ஜிஎஸ்டிக்கு பின்பு இது 10-12%மாக குறையும். இதுவே மற்ற பெரிய நாடுகளில் பொருளின் மதிப்பினில் 6-8% போக்குவரத்து செலவே உள்ளது.[20]
  • ஜிஎஸ்டிக்கு முன்பு சரக்கு போக்குவரத்து துறையானது 50-60% தொழிற்வளங்களை பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான சிக்கலான வரி அமைப்பு மற்றும் காகித வேலைகளுக்கு செலவிடவேண்டும்.
  • ஜிஎஸ்டிக்கு முன்பு சரக்கு வாகனமானது தினமும் சராசரியாக 225கி.மீ பயண் செய்தது, இது தற்பொழுது 300-325கி.மீ அதிகரித்துள்ளது. இதனால் வேகம் மட்டும் அதிகரிக்கவில்லை கூடுதலாக சுற்றுப்புறச்சுழலையும் மேம்படுத்தியுள்ளது.


வருவாய் நடுநிலை விகிதம் (RNR)

[தொகு]
  • RNR என்பது ஒரு குறிப்பிட்ட அடிப்படை ஆண்டில், ஜிஎஸ்டிக்கு முந்தைய உள்ளடக்க வரிகளின் (மத்திய மற்றும் மாநிலங்கள் இணைந்து) அதே வருவாயை உருவாக்கும் ஒரு ஒற்றை ஜிஎஸ்டி விகிதமாகும். இது மாற்றக் காலத்தில் நிதி நடுநிலையை உறுதி செய்கிறது. அரசிற்கு வருவாய் இழப்பின்றி அதே நேரத்தில் பொதுமக்களை பாதிக்காமல் வரிவிகிதத்தினை தீர்மானிக்க இந்த கணக்கீடு உதவியது.[21][22][23]

சூத்திரம் (குழுவால் பயன்படுத்தப்பட்ட எளிய வடிவம்):

RNR = R/B

இதில்: R = அடிப்படை ஆண்டில் உள்ளடக்க வரிகளிலிருந்து கிடைக்கும் மொத்த வருவாய் (₹ லட்சம் கோடி, மதுபானம்/சொத்து வரி நீங்கலாக, ஏனெனில் அது ஜிஎஸ்டிக்குள் வராது மற்றும் அவைகள் மாநில மதிப்புக்கூட்டு வரியுடன் (VAT) இன்னும் உள்ளது).

B = மதிப்பிடப்பட்ட ஜிஎஸ்டி வரி அடிப்படை (விலக்குகள், உள்ளீட்டு வரவுகள், ஏற்றுமதிகள், வரம்புகள் போன்றவற்றிற்குப் பிறகு பொருட்கள் + சேவைகளின் வரி விதிக்கக்கூடிய மதிப்பு).

* தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழு கணக்கீடின்படி, 15-15.5% வருவாய்-நடுநிலை விகிதம் ஆகும்.[24] இந்தக் குழு 12% (குறைந்த வரி), நிலையான விகிதத்திற்கு 17-18% மற்றும் 40% பாவ வரி ஆகியவற்றை முன்மொழிந்தது.[25][26]

* 01 ஜூலை 2017 அன்று, ஜிஎஸ்டி கவுன்சில், ஆரம்ப வரி மதிப்பீட்டின் போது, ​​சுமார் 1,211 பொருட்களை (HSN குறியீடுகள்/சுங்க வரி வகைகளின் அடிப்படையில்) பின்வரும் வரி அடுக்குகளாக வகைப்படுத்தியது: 0% அல்லது பூஜ்ஜிய விகிதம், 5%, 12%, 18% மற்றும் 28%.[27][28][29][30]

  • ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழு 15.3% ஐ வருவாய் நடுநிலை விகிதமாகப் பரிந்துரைத்தது. அதாவது, சராசரியாக இந்த விகிதத்தில் வரி வசூலானால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது என்று கணிக்கப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த நடைபெற்ற ஜிஎஸ்டி வரி சீர்திருத்தமானது நடைமுறையில் பல பொருட்களின் மீதான வரிக் குறைப்பு மற்றும் வரி அடுக்குகளின் மாற்றம் காரணமாக, பயனுள்ள வரி விகிதம் (Effective Tax Rate) 11.6% ஆகக் குறைந்தது. இதன் மூலம் மக்களின் வாழ்நாளில் குறைந்தது தோரயாமாக 1லட்ச ரூபாய் சேமிப்பு இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது.[31][32][33][34][35][36]
வருவாய் நடுநிலை விகிதம்
வருடம் சதவீதம் (%)
2015 RNR committee
15.3
2017 மே
14.4
2017 நவ
12.6
2018 ஜன
12.2
2018 ஜீலை
11.8
2018 திச
11.6
2019 ஜீலை - செப்
11.6
2023 செப்
12.2


  • ஜிஎஸ்டி வரி விதிப்பினால் வருவாய் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு வருவாய் பாதிப்பினை மத்திய அரசு ஈடுசெய்யும்.[37][38][39][40]

வரி வருமானம்

[தொகு]
மாதம்2019-20 வரி வருமானம்மாற்றம்2018-19 வரி வருமானம்மாற்றம்2017-18 வரி வருமானம்மாற்றம்
ஏப்ரல்1,13,865 கோடி (ஐஅ$13 பில்லியன்)Rise1,03,459 கோடி (ஐஅ$12 பில்லியன்)RiseNA
மே1,00,289 கோடி (ஐஅ$12 பில்லியன்)Fall94,016 கோடி (ஐஅ$11 பில்லியன்)[41]FallNA
ஜுன்99,939 கோடி (ஐஅ$12 பில்லியன்)Fall95,610 கோடி (ஐஅ$11 பில்லியன்)[41]RiseNA
ஜுலை1,02,083 கோடி (ஐஅ$12 பில்லியன்)Rise96,483 கோடி (ஐஅ$11 பில்லியன்)[41]RiseNA
ஆகஸ்ட்98,202 கோடி (ஐஅ$11 பில்லியன்)Fall93,960 கோடி (ஐஅ$11 பில்லியன்) [41]Fall93,590 கோடி (ஐஅ$11 பில்லியன்)
செப்டம்பர்91,916 கோடி (ஐஅ$11 பில்லியன்)Fall94,442 கோடி (ஐஅ$11 பில்லியன்)[41]Rise93,029 கோடி (ஐஅ$11 பில்லியன்)Fall
அக்டோபர்1,00,710 கோடி (ஐஅ$12 பில்லியன்)[41]Rise95,132 கோடி (ஐஅ$11 பில்லியன்)Rise
நவம்பர்9,763 கோடி (ஐஅ$1.1 பில்லியன்)Fall85,931 கோடி (ஐஅ$10 பில்லியன்)Fall
டிசம்பர்94,726 கோடி (ஐஅ$11 பில்லியன்)[42]Fall83,716 கோடி (ஐஅ$9.8 பில்லியன்)Fall
ஜனவரி1,02,503 கோடி (ஐஅ$12 பில்லியன்)Rise88,929 கோடி (ஐஅ$10 பில்லியன்)Rise
பிப்ரவரி97,247 கோடி (ஐஅ$11 பில்லியன்)Fall88,407 கோடி (ஐஅ$10 பில்லியன்)Fall
மார்ச்1,06,577 கோடி (ஐஅ$12 பில்லியன்)Rise89,264 கோடி (ஐஅ$10 பில்லியன்)Rise
ஆண்டின் சராசரி98,114 கோடி (ஐஅ$11 பில்லியன்)Rise89,750 கோடி (ஐஅ$10 பில்லியன்)[a]

ஒத்திசைவு பெயரிடும் முறை (HSN code)

[தொகு]

ஒத்திசைவு பெயரிடும் முறை (HSN: Harmonized System of Nomenclature) என்பது ஜி.எஸ்.டி வரிவிகிதத்திற்கு உட்பட்டு பல்வேறு பொருள்களுக்கான வரிவிகிதத்தினை அடையாளம் காணக்கூடிய எட்டு இலக்க குறியீடாகும்.

  • ரூ1.5கோடிக்கு கீழே கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் ஓ.பெ.மு குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டாம்.
  • ரூ1.5 கோடி முதல் 5கோடி வரை கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் இரண்டு இலக்க எண்ணிலான ஓ.பெ.மு குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டும்.
  • ரூ5 கோடிக்கும் மேலே கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் நான்கு இலக்க ஓ.பெ.அ குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டும்.[43]

மின்னணு வழி ரசீது (E-Way Bill)

[தொகு]

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (GSTN) கீழ், 10 கிலோ மீட்டர்(6.2 மைல்)-க்கு மேல் மற்றும் ₹50,000-க்கும் அதிகமாக சரக்குகள் எடுத்து செல்லப்படும்பொழுது, கட்டாயமாக மின்னணு வழி ரசீது உருவாக்கப்படவேண்டும். இது ஜீன் மாதம் 2018 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.[44]

தங்குதடையற்ற மற்றும் விரைவான சரக்கு போக்குவரத்தினை நாடு முழுவதும் உறுதிசெய்யும் வகையில் தணிக்கை நிலையங்கள் நீக்கப்பட்டன..[45]

சட்டம்

[தொகு]

ஜிஎஸ்டி சட்டத்தினை அமலுக்குகொண்டு வர 21- உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.[46] ஜீலை 1 2017 முதல் ஜிஎஸ்டி சட்டம் தேசம் முழுவதும் அமலுக்கு வர இருப்பதால், முன்னதாகவே மாநில மற்றும் யூனியன் பிரதேச ஜிஎஸ்டி சட்டமானது, சம்மு காசுமீர் தவிர்த்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இயற்றப்பட்டது.[47] பத்திரங்கள் கொள்முதல் மற்றும் விற்பனைகளூக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பத்திரங்கள் பரிவர்த்தனை வரிகள் மூலம் தொடர்ந்து கையாளப்படும்.[48]

சரக்கு மற்றும் சேவைகள் வரி பிணையம் (GSTN)

[தொகு]

"சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பிணையம்" (GSTN) ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக அனைவரும் பங்குபெறும் வகையில் அதாவது அதன் பங்குதாரர்களாக அரசு, வங்கிகள் மற்றும் வரி செலுத்துவோர் இணைந்து செயல்படும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டது. ஒன்றிய அரசினால் இந்த வரி அமைப்பின் கீழே உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் எளிதாக கண்காணிக்கப்படும் வகையிலும், வரி செலுத்துவோர் அவர்களின் அனைத்து விதமான வரி பரிவர்த்தனை மற்றும் தகவல்களை சேகரிக்கப்பட்டு சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த பிணையமானது மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கீட்டில் 10 கோடி (ஐஅ$1.2 மில்லியன்) முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசு 24.5 சதவீத பங்குகளிலும், மாநில அரசு 24.5 சதவீத பங்குகளிலும் மேலும் மீதமுள்ள 51 சதவீத பங்குகளில் தனியார் வங்கி நிறுவனங்களாலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.[49]

சரக்கு மற்றும் சேவைகள் வரி சீர்திருத்தக் குழுக்கள்

[தொகு]

27 செப்டம்பர் 2021 அன்று இந்திய நிதி அமைச்சகம் சரக்கு மற்றும் சேவைகள் வரிகள் குறித்து மறு பரிசீலனை செய்து நிதித்துறைக்கு பரிந்துரைகள் வழங்க, மாநில அமைச்சர்கள் கொண்ட இரு குழுக்கள் அமைத்துள்ளது. சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதங்கள் குறித்து பரிந்துரைகள் செய்ய ஒரு குழுவும், வரி ஏய்ப்புகளை கண்டறிந்து ஆலோசனைகளை பரிந்துரை செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.[50]

மின்னனு ரசீது

[தொகு]
  • ஜிஎஸ்டியின் கீழ், அக்டோபர் 1, 2020 முதல் ₹500 கோடிக்கு மேல் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு B2B பரிவர்த்தனைகளுக்கான மின்-விலைப்பட்டியல் கட்டாயமாக்கப்பட்டது.
  • ஜனவரி 1, 2021 முதல் ₹100 கோடிக்கு மேல் விற்றுமுதல் உள்ளவர்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
  • ஏப்ரல் 1, 2021 முதல், ₹50 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் B2B இ-இன்வாய்ஸ்களை உருவாக்கி வருகின்றன,
  • ஏப்ரல் 1, 2022 முதல் வரம்பு ₹20 கோடியாகக் குறைக்கப்பட்டது.
  • ஜனவரி 1, 2023 முதல் ₹5 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் B2B இ-இன்வாய்ஸ்களை உருவாக்க வேண்டும்.[51]

ஜிஎஸ்டி மின்னனு ரசீது இணைய முணையம்: ஜிஎஸ்டியின் மின்னனு ரசீது, உலகிலேயே முதன்முறையாக ஜிஎஸ்டி வரிகட்டுவோர் தங்களுடைய பி2பி(B2B) விலைப்பட்டியலை அரசாங்கத்தின் இணையமுகப்பின் மூலம் உருவாக்குவதினால் அரசாங்கத்திற்கு தேவைப்படும் அறிக்கைகள் மின்னணு முறையில் தரவு பரிமாற்றம் செய்ப்படுகிறது. இதனால் ஜிஎஸ்டி வரிதாக்கல், வரி செலுத்தும் செயல்முறை எளிதாகிறது, மேலும் பயனர்கள் தங்கள் வாடிக்ககையாளர்களூக்கு தேவையான ரசீதை அரசாங்கத்தின் இணைய போர்டல் மூலம் தனித்துவமான விலைப்பட்டியல் குறிப்பு எண் (IRN) ஆகப்பெறமுடியும், கையொப்பமிடப்பட்ட விலைப்பட்டியல், QR குறியீட்டையும் பெறமுடியும். இந்த இணைய முகப்பு ஏபிஐ ஒருங்கிணைப்பில் பெரும் உந்துதலைக் கொண்ட முகமற்ற அமைப்பு, இது சர்வதேச தரநிலை (UBL/PEPPOL) அடிப்படையில் உருவாக்கப்பட்டது, இதனால் இயந்திர வாசிப்பும் பல்வேறு கட்டமைபுகளுக்கிடையே இயங்கும்தன்மை ஆகருக்கு உருவாக்கி வழங்குகிறது.[52]

குறிப்புகள்

[தொகு]
  1. 9 மாதங்களுக்கு மட்டும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://morth.nic.in/sites/default/files/File2842.pdf
  2. https://www.business-standard.com/article/news-cm/the-unified-tax-regime-has-obviated-the-need-for-inter-state-check-posts-117072600477_1.html
  3. "What is GST? - Latest Government Jobs" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-10-05. Archived from the original on 3 November 2023. Retrieved 2023-10-07.
  4. "Looking back at GST's journey: How an idea is now near reality", Indian Express, 31 March 2017
  5. ஜி எஸ் டி என்றால் என்ன?
  6. "What is GST, how is it different from now: Decoding the indirect tax regime", Business Standard, 17 April 2017
  7. "GST may swallow all taxes but cess", Business Standard, 20 September 2016
  8. "On Notes Ban, Firm Warning From West Bengal To Centre: GST Now At Risk", NDTV, 30 November 2016
  9. "Finance minister Arun Jaitley may hike service tax to 16-18% in Budget", The Times of India, 30 January 2017
  10. (https://www.federalreserve.gov/econres/notes/ifdp-notes/effect-of-the-gst-on-indian-growth-20170324.htm
  11. https://cbic-gst.gov.in/about-gst.html#
  12. https://www.federalreserve.gov/econres/notes/ifdp-notes/effect-of-the-gst-on-indian-growth-20170324.htm
  13. https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/mar/doc202232933001.pdf
  14. https://cleartax.in/s/taxes-subsumed-and-not-subsumed-under-gst
  15. https://pibindia.wordpress.com/2017/06/16/faqs-on-goods-and-services-tax-gst/
  16. "GST: The illustrative guide to how transactions will take place after tax reform". Retrieved 10 May 2017.
  17. https://timesofindia.indiatimes.com/business/india-business/gst-has-reduced-rate-at-which-people-have-to-pay-tax-nirmala-sitharaman/articleshow/83979063.cms
  18. https://gstindiaonline.com/pages/gstlegislation/gst_rnr_rate_report/gst_rnr_rate/V%20RECOMMENDATIONS.htm
  19. https://morth.nic.in/sites/default/files/File2842.pdf
  20. https://www.business-standard.com/article/news-cm/the-unified-tax-regime-has-obviated-the-need-for-inter-state-check-posts-117072600477_1.html
  21. https://gstcouncil.gov.in/sites/default/files/2024-02/cea-rpt-rnr.pdf
  22. https://prsindia.org/theprsblog/key-amendments-proposed-to-the-constitution-amendment-bill-on-gst?page=36&per-page=1
  23. https://documents1.worldbank.org/curated/en/918831542619297197/pdf/GST-final-IDU.pdf
  24. https://prsindia.org/budgets/discussionpapers/state-of-state-finances-2023-24
  25. https://economictimes.indiatimes.com/news/economy/policy/cea-led-committee-suggests-gst-rate-of-17-18-per-cent/articleshow/50049187.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  26. https://inc.in/key-issues/not-a-good-and-simple-tax
  27. https://www.pib.gov.in/newsite/printrelease.aspx?relid=167020&reg=3&lang=2#:~:text=The%20GST%20Council%20has%20fixed,products%20will%20invite%20higher%20tax.&text=Many%20countries%20in%20the%20world,and%20real%20estate%20among%20others.
  28. https://documents1.worldbank.org/curated/en/918831542619297197/pdf/GST-final-IDU.pdf
  29. https://economictimes.indiatimes.com/news/economy/policy/government-adopted-pro-poor-approach-in-gst-implementation-revenues-reached-pre-gst-levels-nirmala-sitharaman/articleshow/109891298.cms?from=mdr
  30. https://bfsi.economictimes.indiatimes.com/news/policy/gst-council-likely-to-raise-lowest-slab-to-8-bring-essential-items-under-tax-net/90071144
  31. https://x.com/FinMinIndia/status/1410146119401689090
  32. https://gstcouncil.gov.in/sites/default/files/2024-02/cea-rpt-rnr.pdf
  33. https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=132570
  34. https://timesofindia.indiatimes.com/business/india-business/gst-has-reduced-rate-at-which-people-have-to-pay-tax-nirmala-sitharaman/articleshow/83979063.cms
  35. https://www.moneycontrol.com/news/india/we-are-much-below-revenue-neutral-rate-in-gst-says-fm-sitharaman-12814987.html
  36. https://www.forbesindia.com/article/news-by-numbers/graphic-of-the-day-sbi-report-projects-declining-trend-for-indias-effective-gst-rate/96638/1?fbclid=IwY2xjawQ1t5ZleHRuA2FlbQIxMQBicmlkETEwdFVwMTc4cVJmcXZTcGswc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHn8wqG-AI_xHm57YI5uKnro4w9iZnX6zsoxxfEx_qLeybHMHL0RK9x3zaWza_aem_QByDDazHOuB0pUngix78Fw
  37. "'States on Board, GST Launch from April '16'". newindianexpress.com.
  38. https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/mar/doc202232933001.pdf
  39. https://pib.gov.in/FactsheetDetails.aspx?Id=148644&reg=3&lang=1
  40. https://www.nipfp.org.in/media/medialibrary/2021/10/WP_356_2021.pdf
  41. 1 2 3 4 5 6 "GST collection surges to over Rs 1-lakh crore in October", Business Today
  42. "GST Collection crosses ₹94,000 Crores in December 2018". E-Startup India. Retrieved 5 January 2019.
  43. "Understanding HSN Codes Under GST". Masters India.
  44. "Businesses, govt gear up for E-Way Bill", பிசினஸ் லைன், 25 January 2018
  45. "22 states scrap checkposts for smooth GST rollout", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 4 July 2017
  46. Nair, Remya (8 June 2015), "Rajya Sabha panel to hear GST concerns on 16 June", Live Mint
  47. "GST rollout: All except J-K pass State GST legislation", The Indian Express, 22 June 2017
  48. "GST draft makes it must for companies to pass tax benefit to consumers", The Times of India, 27 November 2016
  49. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-23. Retrieved 2017-06-28.
  50. சரக்கு மற்றும் சேவைகள் வரிகள் மறு பரிசீலனை செய்ய இரண்டு குழுக்கள் அமைப்பு
  51. ஜிஎஸ்டி மின்னனு ரசீது பயனாளர்கள் வரம்பு
  52. ஜிஎஸ்டி மின்னனு ரசீது விளக்கப்படம்

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]