மறைமுக வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு நாட்டின் அரசாங்கம், தன்நாட்டு மக்களிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிகளை வசூல் செய்கிறது. ஒருவர், தன்னுடைய வருமானத்தின் மீது செலுத்தும் வரி, வருமான வரி எனப்படுகிறது. இதில் வரியைச் செலுத்துபவரும் வரியின் தாக்கத்தை ஏற்பவரும் ஒருவரே. எனவே இதனை நேர்முக வரி என்கிறோம்.

ஆனால் விற்பனை வரி போன்றவற்றில் , பொருளை விற்பவர் வரியைச் செலுத்தினாலும் இறுதியில் அதன் சுமையை ஏற்பவர் பொருளை வாங்குபவர்தான். இதில் வரியைச் செலுத்துபவர் வேறு; அதன் சுமையை ஏற்பவர் வேறு. அதனால்தான் இது மறைமுக வரி எனப்படுகிறது. உற்பத்தி வரி , விற்பனை வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி போன்றவை மறைமுக வரிக்கு எடுத்துக்காட்டுகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைமுக_வரி&oldid=2718743" இலிருந்து மீள்விக்கப்பட்டது