விற்பனை வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விற்பனை வரி தமிழ் நாடு பொதுவாக, ஒரு விற்பனையின் வரிக்குரிய விலையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாகக் கணக்கிடப்படுகிறது. விற்பனை வரி விதிகள் வழக்கமாக விலக்குகளின் பட்டியல் ஒன்றைக் கொண்டுள்ளமையால், விற்பனையின் ஒரு பகுதிக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். இந்த வரியின் மீதான சட்டம், வரியானது விலையில் உள்ளடக்கப்பட்டு வரி-உள்ளிட்ட என்று குறிப்பிடப்படுவதையோ அல்லது வரி-தவிர்த்த விலையாக குறிப்பிடப்பட்டு விற்பனை இடத்தில் சேர்க்கப்படுவதையோ அவசியமாக்கலாம்.

பெரும்பான்மையான விற்பனை வரிகள் பொருளை வாங்குபவரிடமிருந்து விற்பனையாளரால் பெறப்பட்டு, அதை அவர் ஓர் அரசு முகமைக்குச் செலுத்துவதாகவே அமைந்துள்ளன. வரியின் பொருளாதாரச் சுமையானது வழக்கமாக பொருளை வாங்குபவரின் மீதே விழுவதாக உள்ளது. ஆயினும், சில சூழ்நிலைகளில், விற்பனையாளரின் மீதும் அது விழுவதாக இருக்கலாம். விற்பனை வரி என்பது பொதுவாக பொருட்களின் விற்பனையின் மீதே விதிக்கப்படுகிறது. ஆயினும், பல விற்பனை வரிகள் சேவைகளின் மீதும் விதிக்கப்படுகின்றன. கருத்தியலின் வழி காண்கையில், விற்பனை வரி என்பது மிக அதிக விகிதத்தில் இணக்கம் கொள்ளப்படுவதாகவும், தவிர்ப்பதற்குக் கடினமானதாகவும், கணக்கிடல் மற்றும் சேகரித்தல் ஆகியவற்றில் எளிமையாகவும் இருத்தல் வேண்டும்.

வகைகள்[தொகு]

பாராம்பரியமான அல்லது சில்லறை அளவிலான விற்பனை வரியானது ஒரு பொருளின் இறுதி நிலைப் பயனரிடம் அது விற்பனையாகும்போதே விதிக்கப்படுகிறது. இந்த நிலை எய்தப் பெறுவதற்காக, இறுதி நிலைப் பயனர் அல்லாத, வாங்குபவர் ஒருவர் விற்பனையாளரிடம், விற்பனையாளர் மீண்டும் அந்தப் பொருளை விற்பதற்காகவே வாங்குகிறார் என்று குறிப்பிடும், "மறு விற்பனைச் சான்றிதழ்" ஒன்றை அளிக்க வேண்டுமென பொதுவான தேவை உள்ளது. இவ்வாறு சான்றிதழ் அளிக்காத வாங்குபவர்களுக்கு விற்கப்படும் ஒவ்வொரு பொருளின் மீதும் இந்த வரி விதிக்கப்படுகிறது.

விற்பனை வரிகளின் இதர வகைகள் கீழ்க்காண்பவற்றை உள்ளடக்கியுள்ளன:

 • நியாய வரி

விற்பனை வரிகளை ஒத்த வரிகள் பின் வருவனவற்றை உள்ளிட்டுள்ளன:

 • ஒரு வணிகத்தின் அனைத்து விற்பனைகளின் மீதுமாக விதிக்கப்படும் மொத்தப் பெறுபொருள் வரிகள் இந்த வரியானது அதன் "விழுதொடர்" அல்லது கூரங்கோபுர விளைவுக்காக விமர்சிக்கப்பட்டுள்ளது; இதில், ஒரு பொருளானது ஒரு முறைக்கும் மேலாக, அதன் உற்பத்தி துவங்கி இறுதியான சில்லறை விற்பனை வரையிலுமாக அதன் ஒவ்வொரு நிலையிலும் வரி விதிக்கப்படுவதாக உள்ளது.[1]
 • தீர்வை வரிகள் என்பவை, வாகன எரிபொருள் அல்லது சாராயம் ஆகியவை போன்ற ஒரு குறுகிய அளவையிலான பொருட்களின் மீது, பொதுவாக, சில்லறை விற்பனையாளர் மீதாக அன்றி, அவற்றின் உற்பத்தியாளர் அல்லது மொத்த விற்பனையாளர் மீது விதிக்கப்படும் வரிகளாகும். தீர்வை வரி என்பதற்கான ஒரு எடுத்துக் காட்டை கீழ்க்காணலாம்:

பயன்பாட்டு வரி: இது விற்பனை வரி விதிக்கப்படாது, நேரடியாகப் பொருட்களை நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரியாகும். பொதுவாக வேறு ஒரு மாநிலத்தில் உள்ள விற்பனையாளரிடம் இருந்து வாங்கும் பொருட்கள், வாங்குபவரிடம் அஞ்சல் அல்லது பொதுப்போக்குவரத்து வழியாகச் சேர்ப்பிக்கையில் இது விதிக்கப்படுகிறது. பயன்பாட்டு வரிகள் என்பவை பொதுவாக ஐக்கிய மாநிலங்களில் உள்ள மாநிலங்களில் விதிக்கப்படுகின்றன. ஆனால், ஊர்திகள் மற்றும் படகுகள் போன்ற பெரும் பொருட்களைத் தவிர இதரப் பொருட்களின் மீது இதனை அமலாக்குவது கடினமானதாகும்.

 • மதிப்புக் கூட்டப்பட்ட வரிகள் என்பனவற்றில் எல்லா விற்பனைகளின் மீதும் வரி விதிக்கப்படுகின்றது. இதனால், மறுவிற்பனைச் சான்றிதழ்களுக்கான ஒரு அமைப்பு தேவையற்றதாகிறது. முதலில் வாங்குபவர் செலுத்திய விலை மற்றும் அதன் பின்னர் அதே பொருளை அடுத்தடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் விலை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டின் மீது மட்டுமே வரி விதிக்கப்படுவதால் ("மதிப்பு கூட்டப்படுதல்") வரி விதிப்பின் விழு தொடர் விளைவானது தவிர்க்கப்படுகிறது.
 • மொத்த வருவாய் வரி என்பது விற்பனை வரி என்பதை ஒத்ததாக இருப்பினும், இதிலுள்ள வேறுபாடு என்னவென்றால், இடை நிலை மற்றும் சாத்தியமான மூலதனப் பொருட்கள் ஆகியவற்றின் மீது இது மறைமுக வரியாக விதிக்கப்படுகிறது என்பதுதான்.

உலகின் பெரும்பான்மையான நாடுகள் விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டப்பட்ட வரி என்பனவற்றையே, தேசிய, மாநில, மாவட்ட அல்லது நகராட்சி நிலைகளில் கொண்டுள்ளன. மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக ஸ்காண்டிநேவியாவில் உள்ள நாடுகள், உலகின் மிக அதிகமான மதிப்புக் கூட்டப்பட்ட வரி விகிதங்களைக் கொண்டுள்ளன. நார்வே, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில், மளிகைப் பொருட்கள் மற்றும் செய்தித் தாள்கள்[2] ஆகிய சிலவற்றின் மீது விதிக்கப்படும் வரி விகிதங்கள் குறைவானது எனினும், விஏடி என்னும் மதிப்புக் கூட்டப்பட்ட வரியானது 25 சதவிகிதமாகும்[3][4].

சில நாடுகளில், அரசின் பல அடுக்குகள் உள்ளன மற்றும் இவை ஒவ்வொன்றும் ஒரு விற்பனை வரியை விதிக்கின்றன. உதாரணமாக, சிகாகோ (குக் மாவட்டம்) ஐஎல் என்னுமிடத்தில் விற்பனை வரியானது 10.25%- இதில் மாநிலத்திற்கான 6.25%, நகராட்சிக்கான 1.25%, மாவட்டத்திற்கான 1.75% மற்றும் பிராந்தியப் போக்குவரத்து ஆணையருக்கான 1% ஆகியவை அடங்கியுள்ளன. உணவு மற்றும் பானங்களின் மீதான 1% நகர்ப்புற இடைகரை மற்றும் விரிவாக்க ஆணையர் வரி என்பதனையும் சிகாகோ கொண்டுள்ளது (இதன் பொருள், வெளியில் உண்ணும் உணவின் மீதான வரி 11.25% என்பதாகும்).[5] லௌசியானாவில் பேட்டன் ரௌஜ் என்னுமிடத்தில், வரி ஒன்பது சதவிகிதமாகும். இதில் மாநிலத்திற்கானது நான்கு சதம் மற்றும் உள்ளூர் வரி ஐந்து சதம்.[6] இருப்பினும், ஐக்கிய மாநிலங்களில் நாடு முழுவதற்கும் பொதுவான விற்பனை வரி என்று ஏதும் இல்லை.

பாராம்பரிய விற்பனை வரி என்பதனை மேலும் பரந்துபட்ட அடிப்படையிலான மதிப்புக் கூட்டப்பட்ட வரி என்பதனால் மாற்றியமைக்கும் போக்கு காணப்பட்டு வருகிறது. இன்னமும் பாராம்பரியமான விற்பனை வரிகளை வைத்திருக்கும் மிகச் சில நாடுகளில் ஐக்கிய மாநிலங்களும் ஒன்றாகும். விஏடி முறைமையை ஐரோப்பியக் கூட்டமைப்பு, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பல நாடுகள் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பதாகக் கடைப்பிடிக்கின்றன. கனடாவில் பெரும்பான்மையான மாநிலங்கள், கூட்டரசின் ஜிஎஸ்டி என்னும் பொது விற்பனை வரியுடன் ஒரு விற்பனை வரியையும் விதிக்கின்றன.

விளைவுகள்[தொகு]

விற்பனை வரிகள் வளர்ச்சியைப் பின்னடையச் செய்வதாகக் கருதப்படுகின்றன; அதாவது, இந்த வரியானது செல்வம் மிக்க குடும்பங்களை விடக் குறைந்த-வருமானம் கொண்ட குடும்பங்களின் மீதே அதிகச் சுமையை ஏற்றுகிறது. இது செலவழிப்பதன் ஒரு விளைவாகும். குறைந்த-வருமானம் கொண்ட குடும்பங்கள் தங்களது வருமானத்தில் பெருமளவைச் செலவழிப்பதனால், அவற்றின் சேமிப்பு குறைகிறது. உணவு, உடை, மருந்துகள் போன்ற "அத்தியாவசியமான" பொருட்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம் இந்த வரியின் பின்னடை விளைவினை மட்டுப்படுத்த இயலும்.[7]

விற்பனை வரியைத் திட்டமிடுதல்[தொகு]

பல அதிகார வரம்புகளிலும், வாணிபங்கள் முன்னதாகவே தங்களது முக்கியமான பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டு எதிர்கால வரிச் சுமைகளைக் குறைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. விற்பனை வரியைத் திட்டமிடுவது என்பதானது பின் வருவனவற்றை உள்ளடக்கலாம்:

 • ஒரு பரிவர்த்தனையில் விதிக்கப்படக்கூடிய வரியை சட்டபூர்வமான வழிகளின் மூலம் குறைக்கத் தீர்மானித்தல். உதாரணமாக, ஒரு நிறுவனமானது தனது சரக்குகளின் விலை விவரப்பட்டியலை எவ்வாறு அமைக்கிறது என்பது, அதன் மொத்தப் பரிவர்த்தனைகளின் மீதான வரிவிதிப்பினைப் பாதிக்கலாம். விற்பனை வரி விதிக்கப்படுவதைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு அதிகார வரம்பும் வெவ்வேறு விதி முறைகளைக் கடைப்பிடிக்கின்றன. சில அதிகார வரம்புகளில், சில வகையான பரிவர்த்தனைகளில், வணிக வரி செலுத்துனருக்குச் சாதகமான முறையில் சட்டங்கள் உள்ளன. ஒரு வணிகமானது பல அதிகார வரம்புகளிலும் இயங்குமாயின், எந்த அதிகார வரம்பில் விற்பனை வரிக் கட்டுப்பாட்டினைக் குறைக்க அல்லது நீக்க இயலுமோ, அதில் விநியோகம் செய்வதைத் தேர்வு செய்வது.
 • விலக்குக்குத் தகுதியான சொத்துக்களை வாங்குகையில் தவறுதலாக வரி செலுத்தப்பட்டு விட்டதா என்று தீர்மானிக்கும் வண்ணம், நிறுவனத்தின் கொள்முதலை மறு ஆய்வு செய்வது.
 • விற்பனைக்குத் தொடர்பான நடைமுறைகளை சீரான கால இடைவெளிகளில் மறு ஆய்வு செய்தல் மற்றும் வரிகள் தொடர்பான தரவுகளைச் சேகரித்துச் சேமித்து வைத்தல். விற்பனை மற்றும் பயன்பாட்டு வரித் தணிக்கையின்போது நிறுவனத்தின் சார்பில் வாதிடுவதற்காக, விலக்கு மற்றும் மறுவிற்பனை சான்றிதழ்கள் மற்றும் விலை விபரப் பட்டியல்கள் மற்றும் இதர பதிவேடுகள் உள்ளிட்ட முறையான ஆதார விபரங்கள் கிடைக்கப் பெறுதல் அவசியம்.

குறிப்புகள்[தொகு]

 1. Chamberlain, Andrew (2006-12-01). "Tax Pyramiding: The Economic Consequences of Gross Receipts Taxes". Tax Foundation. 2007-02-21 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |coauthors= ignored (உதவி)
 2. The VAT Brouchure (PDF) (9th ed.), Swedish Tax Agency, May 2008, p. 6, SKV 552B, 9 செப்டம்பர் 2008 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது, 30 July 2008 அன்று பார்க்கப்பட்டது
 3. ஐரோப்பியக் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளில் மதிப்புக் கூட்டப்பட்ட வரி அமலாக்கப்படுகிறது வரிகள் மற்றும் சுங்கத்திற்கான ஐரோப்பிய ஆணையக கூட்டமைப்பு (2009-7-1), 2009-12-7 அன்று பெறப்பட்டது.
 4. நார்வேயில் மதிப்புக் கூட்டப்பட்ட வரிக்கான ஒரு வழிகாட்டு நூல் பரணிடப்பட்டது 2009-10-30 at the வந்தவழி இயந்திரம் ஸ்கேட்டீடாடென் (2009-4-7), 2009-12-7 அன்று பெறப்பட்டது.
 5. வரி விகித கண்டுபிடிப்பான் இல்லியாய்ஸ் வருமான வரித்துறையின் அதிகாரபூர்வமான வலைத்தளம், 2009-12-7 அன்று பெறப்பட்டது.
 6. 7/1/2009 துவங்கி அமலாக்கத்தில் உள்ள விற்பனை மற்றும் பயன்பாட்டு வரி வகிதங்கள் பரணிடப்பட்டது 2010-02-20 at the வந்தவழி இயந்திரம் ஈஸ்ட் பேட்டன் ரௌஜ் பேரிஷ், 2009-12-7 அன்று பெறப்பட்டது.
 7. "Who Pays? A distributed analysis of the tax systems in all 50 states" (PDF). The Institute on Taxation & Economic Policy. January 2003. 2009-04-01 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-12-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விற்பனை_வரி&oldid=3578277" இருந்து மீள்விக்கப்பட்டது