நிர்மலா சீதாராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
நிதித்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் அருண் ஜெட்லி
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் அருண் ஜெட்லி
வர்த்தகம், தொழில்துறை அமைச்சர்[1]
பதவியில்
மே 26, 2014 – செப்டம்பர் 15, 2017
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ஜெயந்த் சின்ஹா
பின்வந்தவர் சுரேஷ் பிரபு
பாசக பேச்சாளர்
பதவியில்
2010–2014
பின்வந்தவர் சாயினா
ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
26 சூன் 2014 – 21 சூன் 2016
கருநாடக மாநிலங்களவை உறுப்பினர்[2]
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 சூலை 2016
முன்னவர் வெங்கையா நாயுடு, பாசக
தனிநபர் தகவல்
பிறப்பு 18 ஆகத்து 1959 (1959-08-18) (அகவை 63)
மதுரை, சென்னை மாநிலம் இந்தியா இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பரக்கல பிரபாகர்
பிள்ளைகள் 1
இருப்பிடம் ஐதராபாது, தெலுங்கானா, இந்தியா[3][4]
படித்த கல்வி நிறுவனங்கள் சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman; பிறப்பு: 18 ஆகத்து 1959) இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சராக பதவியில் உள்ளார்.[5] இப்பதவிக்கு முன்பு இவர் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார்.[6] இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.[7]

கல்வி[தொகு]

நிர்மலா சீதாராமன் 1980 இல் திருச்சியிலுள்ள சீதாலச்சுமி இராமசாமி கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.[8] பின்னர் உயர்கல்வியினை தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பயின்றார்.

வாழ்க்கை[தொகு]

இவரின் தாய்வழித் தாத்தா முசிறியைச் சேர்ந்தவர் என்பதால் இவர் தமிழ்நாட்டுப் பெண் ஆவார்.[9] நிர்மலா சீதாராமன், டாக்டர். பராகலா பிரபாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.[10][11]

பணி[தொகு]

நிர்மலா சீதாராமன் தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராவார் (2003-2005). இவர் பாரதிய சனதா கட்சியின் ஆறு பேர் கொண்ட செய்தித் தொடர்பாளர்கள் குழுவில் ஒருவராவார்.

வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர்[தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில், மே 26, 2014 அன்று நிர்மலா சீதாராமன் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மனோகர் பரிக்கர் மறைவிற்குப் பின்னர் இவர் இந்தியப் பாதுக்காப்புத் துறையின் அமைச்சராக பதவி வகித்தார்.

நிதி அமைச்சர்[தொகு]

2019 மே 31 முதல் இந்திய ஒன்றிய அரசு நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார் நிர்மலா சீதாராமன்.[12][13][14]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://commerce.nic.in/bio/CIMBiodata.pdf
 2. http://www.ndtv.com/india-news/congress-wins-3-rajya-sabha-seats-from-karnataka-bjp-gets-1-1418017
 3. "National Leadership from Andhra Pradesh - Official BJP site of Andhra Pradesh Nirmala sitharaman's address and contact information". 2014-10-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-09-03 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Official BJP National website". 2014-10-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-09-03 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Cabinet rejig: A nod for BJP’s young champs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 September 2017. http://timesofindia.indiatimes.com/india/cabinet-rejig-a-nod-for-bjps-young-champs/articleshow/60344186.cms. பார்த்த நாள்: 3 September 2017. 
 6. http://www.dinamalar.com/news_detail.asp?id=984171
 7. "Bharatiya Janata Party - The Party with a Difference". Bjp.org. 2019-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-29 அன்று பார்க்கப்பட்டது.
 8. Mohua Chatterjee, TNN Mar 21, 2010, 02.13am IST (2010-03-21). "BJP gets a JNU product as its woman spokesparson - Times Of India". Articles.timesofindia.indiatimes.com. 2013-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-29 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: multiple names: authors list (link)
 9. தமிழ்நாட்டுப் பெண்- நிர்மலா சீதாராமன்
 10. "Andhra Pradesh / Hyderabad News : BJP spokesperson finds her new role challenging". The Hindu. 2010-04-03. 2013-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-06-29 அன்று பார்க்கப்பட்டது.
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-22 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Who Gets What: Cabinet Portfolios Announced. Full List Here". NDTV.com (ஆங்கிலம்). 2019-05-31 அன்று பார்க்கப்பட்டது.
 13. மத்திய அமைச்சர்களும்; ஒதுக்கப்பட்ட துறைகளும்
 14. அமைச்சர்களும், துறை ஒதுக்கீடுகளும்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_சீதாராமன்&oldid=3560757" இருந்து மீள்விக்கப்பட்டது