பி. எச். மனோஜ் பாண்டியன்
பி. எச். மனோஜ் பாண்டியன் | |
|---|---|
| சட்டப் பேரவை உறுப்பினர் | |
| பதவியில் 7 மே 2021 – 4 நவம்பர் 2025 (பதவி விலகல்) | |
| முன்னையவர் | பூங்கோதை ஆலடி அருணா |
| தொகுதி | ஆலங்குளம் |
| பதவியில் 11 மே 2001 – 8 மே 2006 | |
| முன்னையவர் | பி. வேலுதுரை |
| பின்னவர் | பி. வேலுதுரை |
| தொகுதி | சேரன்மாதேவி |
| நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
| பதவியில் 30 சூன் 2010 – 29 சூன் 2016 | |
| பின்னவர் | ஏ. விஜயகுமார் |
| தொகுதி | தமிழ்நாடு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 8 ஆகத்து 1971 |
| அரசியல் கட்சி | திமுக (4 நவம்பர் 2025 முதல்) |
| பிற அரசியல் தொடர்புகள் | அதிமுக (3 நவம்பர் 2025 வரை) |
| துணைவர் | தீப்தி மனோஜ் பாண்டியன் |
| பிள்ளைகள் | 2 |
| பெற்றோர் | பி. எச். பாண்டியன், (தந்தை) சிந்தியா பாண்டியன், (தாய்) |
| முன்னாள் மாணவர் | முதுநிலை சட்டம், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி, சென்னை |
| பணி | வழக்கறிஞர் |
பி. எச். மனோஜ் பாண்டியன் (பிறப்பு: 1971 ஆகத்து 8) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆலங்குளம் தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2001 சட்டமன்றத் தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முனேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] இதன் பின்னர் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஒ. பி. பன்னீர்செல்வம் ஆதரவாளராகச் செயல்பட்ட இவர், நவம்பர் 4, 2025 திராவிட முன்னேற்றக் கழககத்தில் இணைந்த நிலையில், அன்றே தனது சட்டமன்ற பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து சட்டமன்ற சபாநாயகரிடம் பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.[2] மேலும் 2010 முதல் 2016 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
குடும்பம்
[தொகு]பாண்டியன், ஒய். எம். சி.ஏவின் முதல் பொதுச் செயலாளராக இருந்த ராவ் சாகிப் ஜி. சாலமனின் பேரனும்; 1984–89 தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்த டாக்டர் பி. எச். பாண்டியன் மற்றும் மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் சிந்தியா பாண்டியனின் மகனாவார். முன்னணி பெருநிறுவன வழக்கறிஞரும், தமிழக கூடுதல் தலைமை வழக்கறினரான பி. எச். அரவிந்த் பாண்டியன் இவரது சகோதரர் ஆவார். இவருக்கு தீப்தி மனோஜ் பாண்டியன் என்ற மனைவியும், நிரஞ்சனா பாண்டியன், நிவேதனா பாண்டியன் என்ற இரண்டு மகள்கள் உண்டு.
பள்ளிப்படிப்பு
[தொகு]- பாலர் கல்வி நிலயம் (அனிதா பள்ளி நர்சரி முதல் 2 ஆம் வகுப்பு வரை )
- சி. எஸ். ஐ பெயின் பள்ளி, கில்பாக் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை.
- டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) [3]
கல்வித் தகுதி
[தொகு]இளங்கலை சட்டம் (பி. எல்), சென்னை சட்டக் கல்லூரி. எம். எல் (சர்வதேச மற்றும் அரசியலமைப்பு சட்டம்) (சென்னை பல்கலைக்கழகம்).[4]
வகித்த பதவிகள்
[தொகு]- இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக 2010 முதல் 2016 வரை
- நாடாளுமன்ற மனு குழு உறுப்பினர்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு உறுப்பினர்.
- குடிமை விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர், .
- சேரன்மகாதேவி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2001 முதல் 2006 வரை.
- தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவர்.
- டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக செனட் குழு உறுப்பினர்
- முன்னாள் படைவீரர் குழுவில் உறுப்பினர்
கட்சிப் பதவிகள்
[தொகு]- அதிமுக வழக்கறிஞர் அணியின் இணை செயலாளர், 2000 * அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவின் செயலாளர், 2007
- அதிமுக அமைப்புச் செயலாளர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2021-06-01.
- ↑ "மனோஜ் பாண்டியன் திமுகாவில் ஐக்கியம்:எம். எல். ஏ. பதவியிலிருந்து ராஜினாமா". 2025-11-04. Retrieved 2025-11-04.
- ↑ "Tamil Nadu: 7 alumni from Egmore Don Bosco school in fray for assembly election". D Govardan. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 March 2021. Retrieved 4 May 2021.
- ↑ "Paul Manoj Pandian Biography – About family, political life, awards won, history". www.elections.in. Retrieved 2016-04-05.