கோயம்புத்தூர் மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
Appearance
கோயம்புத்தூர் மேற்கு (Coimbatore West) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2009ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இந்த சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டு, கோயம்புத்தூர் தெற்கு தொகுதியாக மாற்றப்பட்டது[1].
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | சி. சுப்ரமணியன் | காங்கிரசு | 21406 | 43.46 | சி. பி. கந்தசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 16354 | 33.21 |
1957 | மருதாச்சலம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 38929 | 22.98 | பழனிசாமி | காங்கிரசு | 37662 | 22.23 |
1962 | கே. பி. பழனிசாமி | காங்கிரசு | 32313 | 37.38 | மருதாச்சலம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 23948 | 27.70 |
1967 | ஜெ. கோவிந்தராஜூலு | திமுக | 41059 | 63.85 | எஸ். ஆர்.பி. பி. செட்டியார் | காங்கிரசு | 23251 | 36.15 |
1971 | பி. கோபால் | திமுக | 34736 | 55.47 | எஸ். எஸ். கிருசுணசாமி | சுதந்திரா | 25286 | 40.38 |
1977 | செ. அரங்கநாயகம் | அதிமுக | 27742 | 36.80 | பி. எஸ். முகமதுஅலி | திமுக | 20393 | 27.05 |
1980 | செ. அரங்கநாயகம் | அதிமுக | 38061 | 48.20 | எம். இராமநாதன் | திமுக | 35634 | 45.13 |
1984 | மு. இராமநாதன் | திமுக | 44542 | 51.91 | எம். எ. ஹக்கிம் | காங்கிரசு | 37650 | 43.87 |
1989 | மு. இராமநாதன் | திமுக | 39667 | 43.80 | டி. எசு. பாலசுப்பரமணியன் | அதிமுக (ஜெ) | 13982 | 15.44 |
1991 | கே. செல்வராசு | காங்கிரசு | 41194 | 51.08 | எம். இராமநாதன் | திமுக | 24696 | 30.63 |
1996 | சி. டி. தண்டபாணி | திமுக | 51652 | 62.47 | இராசா தங்கவேல் | காங்கிரசு | 13353 | 16.15 |
2001 | சு. மகேசுவரி | காங்கிரசு | 40372 | 51.44 | சி. டி. தண்டபாணி | திமுக | 30281 | 38.58 |
2006 | தா. மலரவன் | அதிமுக | 49957 | --- | எ. எசு. மகேசுவரி | காங்கிரசு | 35676 | --- |
- 1957 மற்றும் 1962ல் இத்தொகுதி கோவை II என அழைக்கப்பட்டது.
- 1977ல் ஜனதாவின் எ. அழகிரிசாமி 17942 (23.80%) & காங்கிரசின் ஆர். எஸ். வேலன் 8085 (10.72%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் முசுலிம் லீக்கின் எம். அப்துல் ஜாபர் 13708 (15.13%), பாஜகவின் பி. ரங்கராசு 10456 (11.54%) & அதிமுக ஜானகி அணியின் கே. லியாகத் அலிகான் 7001 (7.73%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991ல் பாஜகவின் மணி என்கிற மூகாம்பிகை மணி 11718 (14.53%) வாக்குகள் பெற்றார்.
- 1 996ல் பாஜகவின் அக்சய ஆறுமுகம் 7503 (9.07%) & மதிமுகவின் எசு. கோவிந்தராசன் 4446 (5.38%)வாக்குகளும் பெற்றனர்.
- 2001ல் மதிமுகவின் சி. பி. எசு. தும்புராசா 4528 (5.77%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எ. எசு. அக்பர் 8329 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.