புரசைவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 6 ஆக இருந்தது. 50-லிருந்து, 61 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. பெரம்பூர், எழும்பூர், அண்ணா நகர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].


தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 V.S.பாபு திமுக 47.04
2001 ப. ரங்கநாதன் திமுக 48.53
1996 ப. ரங்கநாதன் த.மா.கா 70.61
1991 ப. ரங்கநாதன் இ.தே.காங்கிரசு 55.78
1989 ஆற்காடு வீராசாமி திமுக 49.88
1984 நாஞ்சில் கி. மனோகரன் திமுக 51.14
1980 க. அன்பழகன் திமுக 52.35
1977 க. அன்பழகன் திமுக 45.09

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]