தேனி (சட்டமன்றத் தொகுதி)
Appearance
தேனி சட்டமன்றத் தொகுதியில் தேனி-அல்லிநகரம், சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளும், தேனி, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளும் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின்பு தேனி சட்டமன்றத் தொகுதி நீக்கப்பட்டது. இதன்படி தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்த தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதியும் , ஊஞ்சாம்பட்டி ஊராட்சி மன்றப் பகுதியும் பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி) (தனி) சட்டமன்றத் தொகுதியுடனும், மற்ற பகுதிகள் போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி), கம்பம் (சட்டமன்றத் தொகுதி) போன்றவைகளுடன் சேர்க்கப்பட்டு விட்டது[1].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
[தொகு]சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2006 | ஆர். டி. கணேசன் | அதிமுக | 45.50 |
2001 | ஆர். டி. கணேசன் | அதிமுக | 48.88 |
1996 | என். ஆர். அழகராஜா | த.மா.கா | 62.76 |
1991 | இரா. நெடுஞ்செழியன் | அதிமுக | 61.51 |
1989 | ஞா. பொன்னு பிள்ளை | திமுக | 32.87 |
1984 | வி. ஆர். ஜெயராமன் | அதிமுக | 57.36 |
1980 | வி. ஆர். ஜெயராமன் | அதிமுக | 55.44 |
1977 | வி. ஆர். ஜெயராமன் | அதிமுக | 45.71 |
1971 | பி. டி. ஆர். பழனிவேல்ராசன் | திமுக | |
1967 | பி. டி. ஆர். பழனிவேல்ராசன் | திமுக | |
1962 | எஸ். எஸ். ராஜேந்திரன் | திமுக | |
1957 | என். எம். வேலப்பன், என். ஆர். தியாகராசன் (இருவர்) |
காங் |