திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 12 ஆக இருந்தது. 87-லிருந்து, 96 வரையுள்ள சென்னை மாநகராட்சியின் வார்டுகளை உள்ளடக்கிய பகுதிகளைக்கொண்டு இத்தொகுதி அமைக்கப்பெற்றது. ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், மைலாப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டு மீளெல்லை வகுப்புக்குப் பின்னர் இத் தொகுதி நீக்கப்பட்டது[1].


தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 பதர் சயீத் அதிமுக 47.25
2001 எஸ். ஏ. எம். உசேன் திமுக 49.79
1996 நாஞ்சில் கி. மனோகரன் திமுக 70.10
1991 முகமது ஆசீஃப் அதிமுக 55.07
1989 நாஞ்சில் கி. மனோகரன் திமுக 45.86
1984 அப்துல் சமது இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் 50.52
1980 கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப் இ.தே.காங்கிரசு 52.77
1977 மு. அரங்கநாதன் திமுக 35.16

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-04 அன்று பார்க்கப்பட்டது.