உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப்
தமிழ்நாடு சட்டப் பேரவையின்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
29 ஆகத்து 1983 – 15 நவம்பர் 1984
முன்னையவர்மு. கருணாநிதி
பின்னவர்ஓ. சுப்பிரமணியன்
தமிழ்நாடு சட்டப் பேரவை
உறுப்பினர்
பதவியில்
1980–1984
முன்னையவர்மா. அரங்கநாதன்
பின்னவர்அப்துல் சமது
தொகுதிதிருவல்லிக்கேணி
தமிழ்நாடு சட்டப் பேரவை
உறுப்பினர்
பதவியில்
1962–1967
முன்னையவர்யு. கிருஷ்ண ராவ்
பின்னவர்ஹபிபுல்லா பெய்க்
தொகுதிதுறைமுகம்
பதவியில்
1957–1962
முன்னையவர்ஏ. எம் சம்பந்தம்
பின்னவர்இரா. நெடுஞ்செழியன்
தொகுதிதிருவல்லிக்கேணி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப் (K.S.G. Haja Shareeff) என்பவர் ஓர் தமிழக தொழிலதிபரும், அரசியல்வாதியுமாவார். இவர் 1957 முதல் 1962 வரை மற்றும் 1980 முதல் 1984 வரை சென்னை சட்டமன்றத்திலும் அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சட்டமன்றத்திலும் உறுப்பினராக பணியாற்றினார். மேலும் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவராக இவர் 1983 முதல் 1984 வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

அரசியல்வாழ்வு

[தொகு]

1957 ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்கு ஷரீஃப் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷரீஃப் தமிழ் முஸ்லிமான இராவுத்தராக இருந்தபோதிலும்,[1] காங்கிரசுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், எம். முகமது இஸ்மாயில் தலைமையிலான இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், ஷரீஃபுக்கு எதிராக சுயேச்சை இந்து வேட்பாளரை ஆதரித்தது. [2] ஷரீஃப் 36% வாக்குகளுடன் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், இவருக்கு அடுத்த வேட்பாளர் 33% வாக்குகளைப் பெற்றார்.[3] 1957 ஆம் ஆண்டு சட்டமன்ற அவைத்தலைவராக யு. கிருஷ்ணா ராவை ஷரீஃப் ஆதரித்தார்.[4]

1962 ஆம் ஆண்டு சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில், ஷரீஃப் திருவல்லிக்கேணித் தொகுதியில் போட்டியிடுவதற்குப் பதிலாக துறைமுகம் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சி. பி. சிற்றரசுவை தோற்கடித்தார். இவர் 50% வாக்குகளையும், சிற்றரசு 44% வாக்குகளையும் பெற்றார். இருப்பினும், 1967 ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத் தேர்தலில், முஸ்லிம் லீக்குடன் தொடர்புடைய சுயேச்சை வேட்பாளரான ஹபிபுல்லா பெய்க்கிடம் ஷரீஃப் தோல்வியுற்றார்.[5]

1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் ஷரீஃப் மீண்டும் போட்டியிட்டு, 53% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[5] ஷரீஃப் சென்னைக்கான துருக்கி நாட்டின் வர்த்தக தூதராக நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக சட்டமன்றத்தில் இருந்து செரீஃப் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று 1981 ஆம் ஆண்டு, தமிழக ஆளுநரான சாதிக் அலி, அறிவித்தார். ஏனெனில் ஒரு வெளிநாட்டு அரசுப் பதவியை விகிப்பது அந்த அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் கருதியது. இருப்பினும், ஷரீஃப் இறுதியில் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.[6]

1983 ஆகத்து 29 அன்று, ஷரீஃப் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகி, எம். ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை வழிநடத்தினார்.[7] 1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ஏ. கே. ஏ. அப்துல் சமத்தினால் தோற்கடிக்கப்படும் வரை ஷரீஃப் இந்தப் பொறுப்பில் இருந்தார்.[5]

பின்னர் 1987 ஆம் ஆண்டுக்கான இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவராக ஷரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] இவர் பன்னாட்டு சுழற் சங்கத்தின் நீண்டகால உறுப்பினராகவும், தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்தார்.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sadaqathullah, Shaikh. "The National Chamber of Commerce". www.sadaqathullah.com. Retrieved 2022-06-09.
  2. Wright, Theodore P. (1966). "The Muslim League in South India since Independence: A Study in Minority Group Political Strategies". American Political Science Review 60 (3): 579–599. doi:10.2307/1952972. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-0554. https://www.jstor.org/stable/1952972. 
  3. Statistical Report on General Election, 1957 to the Legislative Assembly of Madras (PDF). New Delhi: Election Commission of India. 1957. p. 181. Archived from the original (PDF) on January 27, 2013. Retrieved June 9, 2022.
  4. Hanumanthappa, T. (1962). Madras Legislative Assembly 1957–1962: A Review (PDF). Madras: Legislative Assembly Department. p. 13. Archived from the original (PDF) on February 17, 2022. Retrieved June 9, 2022.
  5. 5.0 5.1 5.2 Tamil Nadu Assembly Election Results. Chennai: பத்திரிகை தகவல் பணியகம். pp. 7, 17. Retrieved June 9, 2022 – via Yumpu.
  6. Patil, S.H. The Constitution, Government and Politics in India (in ஆங்கிலம்). New Delhi: Vikas Publishing House. p. 345. ISBN 978-93-259-9411-9 – via கூகுள் புத்தகங்கள்.
  7. "SEVENTH ASSEMBLY". தமிழ்நாடு சட்டப் பேரவை. Archived from the original on June 6, 2021. Retrieved June 9, 2021.
  8. "FICCI Past Presidents". Federation of Indian Chambers of Commerce & Industry. Retrieved 2022-06-09.
  9. "The Rotarian". பன்னாட்டு சுழற் சங்கம்: 54. August 1987. https://books.google.com/books?id=NDYEAAAAMBAJ&dq=K.S.G.+Haja+Shareeff&pg=PA54. 
  10. Marthandam, Nambi (March 31, 1976). "Prices of shares in Madras Stock Exchange took a upward trend shortly after the Budget". இந்தியா டுடே (in ஆங்கிலம்). Retrieved 2022-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._ஜி._ஹாஜா_ஷெரீஃப்&oldid=4342836" இலிருந்து மீள்விக்கப்பட்டது