பெரணமல்லூர் (சட்டமன்றத் தொகுதி)
பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் கேரளாவின் ஆளுநராக 27 அக்டோபர் 1982 முதல் 23 பெப்ரவரி 1988 வரை பதவி வகித்த பா.ராமச்சந்திரன் அவர்கள் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்த வரலாறு பெற்ற தொகுதி. அதனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்த தமிழக சட்டமன்ற தொகுதியின் முடிவுகள் வருவதற்குள், பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பதை நிச்சயமாக கேட்டு தெரிந்துகொள்வார்கள். மேலும் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அரசியல் வாழ்வில் ஒரு மைல்கல்லாக பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதி விளங்கியுள்ளது.அதாவது பெரணமல்லூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் ஜெ அணி வேட்பாளர் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் ஜெயலலிதா வசமானதிற்கு பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதி மிக முக்கிய காரணம். 2008 ஆம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1962 | பா. ராமச்சந்திரன் | காங்கிரசு | 24817 | 49.50 | வி.டி. அண்ணாமலை முதலியார் | திமுக | 16252 | 32.41 |
1967 | வி. டி.அண்ணாமலை முதலியார் | திமுக | 29413 | 46.25 | பி. இராமசந்திரன் | காங்கிரசு | 20225 | 31.80 |
1971 | பூ. எட்டியப்பன் | திமுக | 39160 | 64.50 | பூபாளன் | ஸ்தாபன காங்கிரசு | 21557 | 35.50 |
1977 | பி. சந்திரன் | அதிமுக | 27860 | 40.47 | பி. எட்டியப்பன் | திமுக | 19822 | 28.79 |
1980 | பி. எம். வெங்கடேசன் | அதிமுக | 32645 | 44.09 | ஆர். மார்கபந்து | காங்கிரசு | 31767 | 42.90 |
1984 | ஆர். அரி குமார் | அதிமுக | 49591 | 54.39 | எ. இராசேந்திரன் | திமுக | 37599 | 41.24 |
1989 | ஆர். எட்டியப்பன் | திமுக | 41908 | 45.86 | ஜெய்சன் ஜேக்கப் | அதிமுக (ஜெ) | 24588 | 26.90 |
1991 | எ. கே. சீனிவாசன் | அதிமுக | 56653 | 54.55 | ஜி. சுப்பரமணியன் | திமுக | 29481 | 28.39 |
1996 | என். பாண்டுரங்கன் | திமுக | 57907 | 52.17 | சி. சீனிவாசன் | அதிமுக | 30114 | 27.13 |
2001 | எ. கே. எசு. அன்பழகன் | அதிமுக | 52625 | 45.62 | பி. போசு | மக்கள் தமிழ் தேசம் | 44266 | 38.37 |
2006 | ஜி. எதிரொளி மணியன் | பாமக | 56331 | --- | எ. கே. எசு. அன்பழகன் | அதிமுக | 49643 | --- |
- 1962ல் சுதந்திரா கட்சியின் பி. எட்டியப்ப கவுண்டர் 6670 (13.30%) வாக்குகள் பெற்றார்.
- 1967ல் சுயேச்சை பி. எட்டியப்பன் 10714 (16.85%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் ஜனதாவின் டி. சுப்ரமணியன் 11685 (16.97%) & காங்கிரசின் டி. கிருசுணசாமி நாயுடு 7495 (10.89%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் அணி) பரசுவநாதன் 8275 (11.18%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் சி. கே. நடராசன் 14972 (16.38%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் எல். ஆண்டான் 17712 (17.06%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் பாமகவின் எம். துரை 20143 (18.15%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எ. கோபிநாதன் 9149 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.