கோயம்புத்தூர் கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
Appearance
கோயம்புத்தூர் கிழக்கு (Coimbatore East) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். 2009ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி கோவை கிழக்கு தொகுதி நீக்கப்பட்டு, கோயம்புத்தூர் வடக்கு என பெயர் மாற்றப்பட்டது[1].
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | சி. சுப்பிரமணியம் | காங்கிரசு | 21406 | 43.46 | சி. பி. கந்தசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 16354 | 33.21 |
1957 | சாவித்திரி சண்முகம் | காங்கிரசு | 205111 | 44.04 | பூபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 9938 | 21.34 |
1962 | ஜி. இ. சின்னதுரை | காங்கிரசு | 38645 | 42.10 | இராஜமாணிக்கம் | திமுக | 21023 | 22.90 |
1967 | எம். பூபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 33122 | 50.81 | ஜி. ஆர். தாமோதரன் | காங்கிரசு | 27477 | 42.15 |
1971 | கே. இரங்கநாதன் | திமுக | 31003 | 46.71 | எ. தேவராசு | காங்கிரசு (ஸ்தாபன) | 27491 | 41.42 |
1977 | கே. இரமணி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 20803 | 30.54 | கே. இரங்கநாதன் | திமுக | 18784 | 27.58 |
1980 | கே. ரமணி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 33666 | 45.39 | கங்கா நாயர் | காங்கிரசு | 33533 | 45.21 |
1984 | கே. ரமணி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 40891 | 48.14 | கோவை தம்பி | அதிமுக | 39832 | 46.89 |
1989 | கே. ரமணி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 37397 | 39.31 | இ. இராமகிருஷ்ணன் | காங்கிரசு | 29272 | 30.77 |
1991 | வி. கே. லட்சுமணன் | காங்கிரசு | 46544 | 55.56 | கே. சி. கருணாகரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 29019 | 34.64 |
1996 | வி. கே. லட்சுமணன் | தமாகா | 61860 | 68.81 | ஆர். எசு. வேலன் | காங்கிரசு | 14174 | 15.77 |
2001 | வி. கே. லட்சுமணன் | தமாகா | 41419 | 50.08 | என். ஆர். நஞ்சப்பன் | பாஜக | 38208 | 46.19 |
2006 | பொங்கலூர் ந. பழனிசாமி | திமுக | 51827 | --- | வி. கோபால கிருட்டிணன் | அதிமுக | 45491 | --- |
- 1957 & 1962ல் இத்தொகுதி கோவை I என அழைக்கப்பட்டது.
- 1957ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதிக்கு இரு உறப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். எனவே மருதாச்சலம் & பழனிசாமி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 1971 ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் பூபதி 7873 (11.86%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் ஜனதாவின் கே. ஆர். வெங்கடாசலம் 14049 (20.63%) & காங்கிரசின் எஸ். இராமசாமி 13877 (20.37%) வாக்குகளும் பெற்றனர்.
- 1980ல் ஜனதாவின் (ஜெயபிரகாசு நாராயணன் பிரிவு) கே. ஆர். வெங்கடாசலம் 5406 (7.29%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் டி. மலரவன் 14727 (15.48%) & அதிமுக ஜானகி அணியின் வி. ஆர். மணிமாறன் 8799 (9.25%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991ல் பாஜகவின் ஜி. பூபதி 5275 (6.30%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் கே. சி. கருணாகரன் 8523 (9.48%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் ஜி. மேரி 7886 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.