அப்துல் சமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்துல் சமது
Samad.jpg
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 4, 1926(1926-10-04)
காரைக்கால், புதுச்சேரி
இறப்பு நவம்பர் 4, 1999(1999-11-04) (அகவை 73)
சென்னை
அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்
வாழ்க்கை துணைவர்(கள்) நர்கீஸ்பானு
பிள்ளைகள் 3 மகன், 2 மகள்
இருப்பிடம் சென்னை

ஆ. கா. அ. அப்துல் சமது (அக்டோபர் 4, 1926 - நவம்பர் 4, 1999) இந்திய அரசியல்வாதி ஆவார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்தார். இவருடைய தந்தை ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி திருக்குர்ஆனை முதன்முதலில் முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார்[1].

அரசியலில்[தொகு]

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். 1974 தமிழக இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தலைவராகவும், பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமது இறுதிகாலம் வரை பணியாற்றினார். மணிச்சுடர் நாளிதழை துவக்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். நவம்பர் 4 1999 -ல் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. திருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் தந்த சூபிஞானி பீர்முகமது வலியுல்லா (திண்ணையில்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_சமது&oldid=3442487" இருந்து மீள்விக்கப்பட்டது